இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் நாட்டினர் சுட்டு கொலை!

இந்தியாவில் ராஜஸ்தான் வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டினர் இருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லை பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் எனும் மாவட்டத்தில் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெளியிடப்படாத ஹெராசின் ஆகியவற்றை மீட்டுள்ளனர். நாட்டுக்குள் நுழைய முயன்ற நபர்களை … Read more

காஷ்மீர் மற்றும் குஜராத்தையும் சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்!

பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் குஜராத் பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் அந்நாட்டின் புதிய மேப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பகுதிகளான காஷ்மீர் மற்றும் குஜராத்தில் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமாக பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது நிறைவேற்றுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானின் இந்த … Read more

மசூதியாக மாற்றப்படும் குருத்துவார் – இந்தியா கடும் எதிர்ப்பு

குருத்துவாரை மசூதியாக மாற்ற முடிவு  செய்துள்ள நிலையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாகிதி அஸ்தானா என்ற பிரசித்தி பெற்ற  குருத்துவார் பாகித்தானில் உள்ள லாகூரில் உள்ளது.இந்த கோயில் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. இதற்கு அருகில் மசூதி ஒன்றும் உள்ளது.இதனிடையே குருத்துவார் மசூதிக்கு சொந்தமானது என்றும் அதனை மசூதியாக மாற்ற பாகிஸ்தான்  முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் … Read more

பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழப்பு 97 ஆக அதிகரித்துள்ளது!

பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நேற்று பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரமாகிய கராச்சியில் 100 க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற விமானம் ஒன்று தீ பிடித்து எரிந்து கீழே கட்டிடத்தில் விழுந்தது. இதனால் விமானத்தில் உள்ளவர்களுக்கும் கட்டிடத்தில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.  விமானத்தில் இருந்தவர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அந்த விமான விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.  இறந்தவர்களில் 60 பேரின் உடல்கள் ஜே.பி.எம்.சி மருத்துவமனையிலும், 32 பேரின் உடல்கள் சி.எச்.கே … Read more

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 14, 612 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 14, 612 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதனையடுத்து உலகம் முழுவதும்  200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 31,13,447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9,25,730 பேர் குணமடைந்துள்ளனர்.2,16,930 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10,34,588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவின் அருகில் உள்ள நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14612-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை … Read more

பொறுப்புள்ள குடிமகன் சோதனைக்கு சம்மதம் – பாகிஸ்தான் பிரதமர் குறித்து உதவியாளர் தகவல்!

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தோற்று உள்ளதா? சோதனைக்கு ஒப்புக்கொண்டதாக உதவியாளர் தகவல். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் பாதிப்பு பாகிஸ்தானிலும் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அங்கு இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அண்மையில் பாகிஸ்தானின் பிரதமராகிய  இம்ரான்கானை பிரபல அறக்கட்டளை தலைவர் பைசல் எடி என்பவர் சந்தித்து ஆலோசனை … Read more

பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது-இந்தியா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புவதாக அவர்களுக்கு எதிராக தவறான தகவல்கள் இந்தியாவில் பரப்பப்படுவதாக இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுபான்மையினரின் பாதுகாக்க இந்தியா அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. எனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது குறித்து கூறுகையில்,இந்திய அரசு கொரோனா விவகாரத்தில் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே குறிவைக்கிறது என்று தெரிவித்தார். இந்நிலையில்தான் தான் இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் … Read more

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறல்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போர் இன்னும் நின்றபாடில்லை. ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று காலை 7 45 மணி அளவில் எல்லை பகுதியில் சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் செலின் மோட்டார்ஸ் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறி உள்ளது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து தான் வருகிறது. இது போன்றே கடந்த வெள்ளிக்கிழமையும் பாகிஸ்தான் … Read more

காஷ்மீரில் பரபரப்பு !ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி பறிமுதல்

ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இதனை தொடர்ந்து காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக முசாபராபாத்தில் வரும் 13- ஆம் தேதி … Read more

சர்வதேச விண்வெளித்துறைக்கு பெருமை-பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை பாராட்டு

இந்தியாவின் நீண்ட நாள் கனவான சந்திராயன் -2 விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.சந்திராயன் -2 விண்கலம் ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாக முடிந்தது.ஆனால் நிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டரை களமிறக்கும் திட்டம் மட்டும் தான் சிறிது சறுக்கலில் முடிந்தது.அதாவது நிலவில் இருந்து சரியாக 2.5 கிலோமீட்டர் தூரத்தில் அதன் சிக்னல் கிடைக்காமல் போனது.நாடு முழுவதும் இதனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு பல தரப்பு மக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,பாகிஸ்தானின் முதல் … Read more