#BREAKING: எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சரத்பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை களமிறக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இன்று  முன்னதாகவே திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியில் … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் – சோனியா காந்தி அழைப்பு!

2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடர வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, 18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் சற்று முன் ஆலோசனை நடத்தினர். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விடுதலை சிறுத்தைக் கட்சி, முன்னாள் பிரதமர் … Read more

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை!

முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காணொளி வாயிலாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. … Read more

டெல்லியில் மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவார், ராகுல் காந்தி தலைமையில் எதிரிக்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து பேரணி. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டது. நேற்று அவை கூடியதும் … Read more

மழைக்கால கூட்ட தொடர் இறுதி வாரம் – எதிர் கட்சி தலைவர்கள் ஆலோசனை!

கடைசி வார நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பேச வேண்டியவை குறித்து இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர். கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழைக்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், … Read more

சிஏஜி  அறிக்கையில் ரபேல் விலை இல்லை…எதிர்க்கட்சிகள் அதிருப்தி…!!

ரபேல் போர்விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக  எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது. இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி  அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  தாக்கல் செய்தார். இதில் மோடி அரசு பிரான்சுடன் மேற்கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம் காங்கிரஸ் அரசு போட்ட ஒப்பந்தத்தை விட 2.86 சதவீத விலை மலிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரபேல் ஒப்பந்தங்கள் … Read more

” சர்வாதிகாரத்தை அகற்றி ஜனநாயகத்தை காப்போம் ” மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்…!!

டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கண்டன பொதுக்கூட்டம் எதிர்க்கட்சிகள் ஓரணியில் அமைவதற்கான அடிப்படையில் தான் நடைபெறுகிற்றது. ஏற்கனவே மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்றையதினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டமானது   சர்வாதிகாரத்தை அகற்றுவோம் ஜனநாயகத்தை காப்போம் என்ற ஒரு தலைப்பை  நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இடம்பெறுவதற்கு … Read more

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி…மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு…!!

மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.இன்றோடு முடிவடைய இருந்த மாநிலங்களவை கூட்டத்தொடரை சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மேலும் ஒருநாள் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசின் இந்த நீட்டிப்பு முடிவை கண்டித்து எதிர் கட்சிகள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர் கட்சிகளின் அமளிகளுக்கு 10 % இடஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்ய பட்டதும் எதிர்க்கட்சிகளின் கூச்சலால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து மாநிலங்களவையை மதியம் 2 மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.