ஊட்டி : கட்டுமான பணியின் போது மண்சரிவு.! 7 பேர் உயிரிழப்பு.!

Ooty Construction Accident

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே,  காந்தி நகர் பகுதியில் லவ்டேல் செல்லும் சாலையில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. “எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” – ஜெயக்குமார் இந்த அடுக்குமாடு குடியிருப்பு சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. சுமார் 15 அடிக்கு மேலான உயரத்தில் தடுப்பு சுவரானது அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அந்த கட்டிடத்திற்கு … Read more

ஊட்டியில் காட்டாற்று வெள்ளதில் உயிரிழந்தோருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்.! ஆட்சியர் அறிவிப்பு.!

ஆனிக்கல் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம். – நீலகிரி மாவட்ட ஆட்சியர். உதகமண்டலம்  (ஊட்டி) அருகே ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது,  காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில், 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு … Read more

ஊட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதில் 3 பெண்கள் சடலமாக மீட்பு.! ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரம்.!

ஆனிக்கல் ஆற்றில் ஏற்றப்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்களில் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மழை வரத்து காரணமாக உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக … Read more

ஊட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம்.! மீட்பு பணிகள் தீவிரம்.!

ஊட்டி ஆனிக்கல் காற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம்.  வடகிழக்கு பருவமழை இன்னும் ஓயாத காரணத்தால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் உபரி நீர் வெளியேறும் அளவும் அதிகரித்து வருகிறது. அப்படி உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. … Read more

#BREAKING: சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்!

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம். ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோவை மற்றும் உதகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். இதுபோன்று நேற்றைய தினம் உதகையில் 124-ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இன்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கிறார். அதில் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் … Read more

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி : ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் ….!

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் இடையே மண்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்தது. இதனால் ரயில் பாதை முழுவதும் மூடப்பட்ட நிலையில், பாதையோரத்தில் … Read more

#Breaking:குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஊட்டி பயணம் ..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னையிலிருந்து,ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார். தமிழ்நாட்டிற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று வருகை புரிந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,நேற்று சட்டபேரவையில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்நிலையில்,நான்கு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் தனி விமானம் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.மேலும்,ராஜ்பவனில் இருந்து கிண்டி விமான நிலையத்திற்கு செல்லும் அவரை வழியனுப்புவதற்காக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர்,தமிழக டிஜிபி உள்ளிட்டோர்,மூத்த அமைச்சர்கள் ராஜ்பவனுக்கு சென்றனர். சென்னையில் இருந்து … Read more

“இனி ஊட்டிக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்”- ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளிமாநிலத்தவருக்கு இ-பாஸ் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில், கொரோனா பரவல் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அதிகாரிகளுடன் ஊட்டியில் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், … Read more

ஊட்டியில் மருத்துவக் கல்லூரிக்காக 1,838 மரங்கள் வெட்ட அனுமதி..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.447.32 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி அமையவுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம்மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ஊட்டி வனப்பகுதியில் அமையவுள்ள மருத்துவ கல்லூரி க்காக அங்கு 1,838 அயல்நாட்டு மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது. கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை, 90% யூக்கலிப்டஸ் மரங்களே என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.  வெட்டப்படும் … Read more

நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கில், தமிழக அரசு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது. மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் பயணிகள், இ-பாஸ் பெற்று செல்லலாம் என … Read more