மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் – நிதியமைச்சர்

பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய நிதியமைச்சர், நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் … Read more

GST- வரி குறைப்பு : எந்தெந்த பொருட்களில் எவ்வளவு விகிதம் குறைந்துள்ளது.?

ஜி.எஸ்.டி.க்கு முந்தைய வரியை ஒப்பிடுகையில், ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு வரி குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தற்போதுள்ள நிதியமைச்சர் கூறுகையில், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாதது என்றும் இந்திய வரிவிதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களில் ஜிஎஸ்டி, வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி.க்கு முந்தைய … Read more

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பட்ஜெட்…நிர்மலா சீத்தாராமன் பேட்டி…!!

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய பட்ஜெட் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி_யில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் , மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றக் கூடிய பட்ஜெட்டை, மத்திய அரசு தாக்கல் … Read more

ரஃபேல் ஒப்பந்தம் பாதுகாப்பாக வைக்கப்பட காரணமே காங்கிரஸ் தான்- நிர்மலா சீதாராமன்..

இன்று மக்களவை கூடியது.அதில் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் ஆவேசமான பேச்சை வெளிப்படுத்தினார்.அவர் பேசியதை தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தம்  குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார். அவர் கூறியதாவது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை என்றும், இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டதே காங்கிரஸ் அரசுதான் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். மேலும் ரஃபேல் ஒப்பந்தம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்பதற்கு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத் … Read more