நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தனி வார்டு அமைத்துள்ள மதுரை அரசு மருத்துவமனை…!

நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தனி வார்டு அமைத்துள்ள மதுரை அரசு மருத்துவமனை. கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீபா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு வார்டு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனிமைப்படுத்தும் பகுதி சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை எச்ஓடி மருத்துவரான … Read more

கேரளா: நிபா வைரஸ் காரணமாக 68 பேர் தனிமைப்படுத்துதல்..!

நிபா வைரஸ் தொற்று காரணமாக கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிபா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் அங்கு பரவியுள்ளது. இந்த தொற்றால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 12 வயதுடைய சிறுவன் உயிரிழந்தான். கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுவன் நிபாவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவனுடைய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு புனேவில் உள்ள கிருமியியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள … Read more

நிபா வைரஸ் கொரோனாவை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் – அமெரிக்க நோய் தடுப்பு மையம்!

கொரோனாவை விட நிபா வைரஸ் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.  கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், கேரள மாநிலத்தில் மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் சில பகுதிகளிலும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு சென்ற மத்திய குழுவினர் அங்கிருந்த பழங்களின் மாதிரிகளை சேகரித்து, தொடர்ச்சியாக இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், … Read more

கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி..!

கேரளாவில் மீண்டும் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கேரளாவில் இன்று காலை 5 மணியளவில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளான். நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தான். சனிக்கிழமை இவனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும், இவனது மாதிரிகள் புனே தேசிய கிருமியியல் மையத்திற்கு நேற்று முன் தினம் அனுப்பப்பட்டது. இதில் இவனுக்கு நிபா … Read more

நிபா வைரஸ் தாக்கம்: கேரளாவுக்கு விரைந்த மத்தியக்குழு..!

நிபா வைரஸ் தாக்கத்தால் தேசிய நோய் தடுப்பு மையத்தின் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்து வருகிறது. இருந்தபோதிலும் கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் உள்ளது. அதன் காரணத்தால் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமான அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் ஒரு சிறுவன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா … Read more

இந்தியாவில் நிபா வைரஸ் பரவுகிறதா? WHO எச்சரிக்கை விடுத்துள்ளது உண்மைதானா?

நிபா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள். இன்று அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல உண்மை செய்திகளை அறிந்து கொண்டாலும், பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வதந்தியான செய்தி பரவி வருகிறது. அதன்படி, உலக சுகாதார நிறுவனம் (WHO) இப்போது இந்தியாவில் நிபா வைரஸ் வெடிப்பதாக … Read more

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் !முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிபா வைரசானது வேகமாக பரவி வருகிறது. நிபா வைரஸ் என்பது வௌவால்களின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். இந்த ஆண்டும் கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் பலருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் கேரளாவில் உள்ள கொச்சிக்கு 6 பேர் கொண்ட மத்திய குழு வந்துள்ளது.மேலும் இது தொடர்பாக வதந்திகள் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more