தமிழகத்தில் 5 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தில்  சென்னை,நெல்லை, ராமநாதபுரம், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து மற்ற நான்கு மாவட்டங்களிலும் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை

இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை, பெரம்பலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் கொடைக்கானலிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும் தூத்துக்குடியில் லேசான மழை பெய்து வருகிறது.

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!5 பேர் உயிரிழப்பு!!

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  நெல்லை மாவட்டம் அருகே உள்ள வரகனூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்பு பணி தாமதகின்றது.மேலும் தீயை அணைக்கும் பணியில் … Read more

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காலமானார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அறவாணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக பணியாற்றிய அறவாணன் தமிழ் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியவர். 1941ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த இவர், தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினராக பணியாற்றி உள்ளார். சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை 3 … Read more

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைவு…. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி…!!

நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் நேற்று குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்து காவல்துறையினர் உத்தரவிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், இன்று … Read more

நெல்லையில் SFI சார்பில் மாணவர்கள் போராட்டம்..!!

ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை ம.சு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி , கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளில் சமீபத்தில் உயர்த்திய கட்டண உயர்வு மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என்ற  நடைமுறையை மாற்றியமைத்திட இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று நெல்லையில் உள்ள ம.தி.தா இந்து கல்லூரி மாணவர்கள் காலை வகுப்புக்கு செல்லாமலே கல்லூரி வளாகத்தில் நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வந்தார்.அப்போது … Read more

நெல்லை , தேனியில் மழை ..!!

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 56 புள்ளி 5 அடியாக உயர்ந்துள்ளது. நெல்லையில் கனமழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு:   நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக பாபநாசம், … Read more

“செங்கோட்டையில் 144 தடை”மேலும் நீட்டிப்பு…!கண்கணிப்பு வளையத்தில் செங்கோட்டை.!!

செங்கோட்டையில் விநாயர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது. அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் … Read more

“கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்”தொடரும் நிறுத்தால் நிறுத்தபடுகிறதா மின்சாரம்…???

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1-ஆம் தேதி பராமரிப்புப் பணிகளுக்காக முதல் அணு உலையிலும் 2-ஆம் தேதி வால்வு பழுது காரணமாக 2-வது அணு உலையிலும் உற்பத்திப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. 2-வது அணு உலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் வால்வில் பழுது காரணமாக மின் உற்பத்தி … Read more

“கைதி சொகுசு வாழ்க்கை எதிரொலி” பாளையங்கோட்டை சிறை திடீர் சோதனை..!!

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயர் அதிகாரிகள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் தற்போது அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் மாநகர காவல்துறையினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அவர்கள் சோதனையிட்டனர். DINASUVADU