ஜூலை 7ம் தேதி நீட் முதுநிலைத் தேர்வு!

NEET PG 2024

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு மாற்றாக, நெக்ஸ்ட்(NExT) தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் வரை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடரும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஒழுங்குமுறையை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்,  முன்னதாக மார்ச் … Read more

#BREAKING: நீட் வழக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை!

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், நீட் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. நீட் வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. கடந்த மாதம் 27ம் தேதி இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றது. இந்த நிலையில், இன்று விசாரணையின்போது, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா … Read more

தேசிய கல்விக்கொள்கையை விரைவில் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் – மத்திய கல்வி அமைச்சர்

நீட் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று மத்திய கல்வி அமைச்சர் பேட்டி. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் … Read more

#BREAKING: நீட் தேர்வு குளறுபடி – விடைத்தாளை பார்க்க அனுமதி!

நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டு குளறுபடியை நேரில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. மதுரையை சேர்ந்த மாணவி ஜெயசித்ரா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதியிருந்தேன். தேசிய தேர்வு முகமை … Read more

#BREAKING: நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – வெளியானது புதிய தகவல்!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பாக புதிய தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன்படி, 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி (35%) பெற்றுள்ளனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு எழுதிய … Read more

திமுக அரசு நீட் தேர்வை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை – ஈபிஎஸ்

மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் நீண்டு கொண்டே இருப்பது கொடுமை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை. நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடரும் அவலம் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் … Read more

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்குரியது -வைகோ

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என வைகோ வேண்டுகோள். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து வாழ்வில் உயர வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் … Read more

#JustNow: நீட் தேர்வு – தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் 80% பேர் தோல்வி!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படாத நிலையில், 80% பேர் தோல்வி என தகவல். NEET – UG தேர்வு முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. இதில், மருத்துவ இளநிலை படிப்பி சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வில் 17.64 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 56.3% என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வில் … Read more

#NEETUG2022: நாளை நீட் தேர்வு.. மாணவர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்! முழு விவரம் உள்ளே!

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய வழிகாட்டுதல் இதோ. தேசிய தேர்வு முகமை (NTA) எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை (NEET- UG 2022)  மருத்துவ படிப்புகளில் சேர நாளை (ஜூலை 17) நீட் நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். தேர்வு மதியம் 2 … Read more

#JustNow: நீட் தேர்வு – அரியலூரை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு … Read more