#BREAKING: நீட் தேர்வு ரத்தில் உறுதியாக உள்ளோம் – அதிமுக

நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று விஜயபாஸ்கர் கருத்து. நீட் விலக்கு மசோதா தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நீட் விலக்கு … Read more

#Breaking:”நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது.சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பாததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து … Read more

#BREAKING: நீட் விவகாரம் – சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பாததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் … Read more

தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்! – சீமான் அதிரடி

நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழிக்கும் ‘நீட்’ தேர்வினை திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று, ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மாணவச் செல்வங்களின் தொடர் … Read more

#BREAKING: நீட் தேர்வு – நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் – முதல்வர் அறிவிப்பு

நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் பேரவை 110விதியின் கீழ் அறிவிப்பு. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாம் நாளான இன்று றைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ வீரர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், புனீத் ராஜ்குமார் ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கேள்வி – பதில் நேரம் நடைபெற்றது. இதன்பின் … Read more

“இவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி” – ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

தி.மு.க.தேர்தலின் போதும்,பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோதும்,வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என்று உண்மையான சூழலை மாணவர்களிடம் தெரிவிக்காமல்,நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத் தேர்வினை அரசியலாக்கியதே மாணவச் செல்வங்களின் மன உளைச்சலுக்கு காரணம் என்று ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வரை,நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியினை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும்,இந்த  விடியா அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிரிழந்த மாணவச் செல்வங்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் … Read more

நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது – அண்ணாமலை

நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு. மதத்தோரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன்கீ பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டின் கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சி என்பதால் இதை திருவிழா போல் கொண்டாட அடையாற்றில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, … Read more

“கிணற்றில் போட்ட கல்லாக சட்டம்…அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

கிணற்றில் போட்ட கல்லாக நீட் விலக்கு சட்டம் உள்ளதாகவும்,இதன் அடுத்தக் கட்டம் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக இனி ஒருவரைக் கூட பலி கொடுக்கக் கூடாது.அதற்கான ஒரே தீர்வு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது தான் என்றும்,நீட் விலக்கு சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்பதுடன் அரசு ஒதுங்கி விடக் கூடாது.அடுத்த சில மாதங்களுக்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் … Read more

நீட் விலக்கு மசோதா – மக்களவையில் திமுக எம்பி டி.ஆர் பாலு நோட்டீஸ்!

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் பற்றி விவாதிக்க திமுக எம்பி டி.ஆர் பாலு நோட்டிஸ். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் உள்ளது தொடர்பாக மக்களவை அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர் பாலு அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

நீட் தேர்வு ரத்து தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் அறிமுகம்!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் அறிமுகம் செய்துள்ளார். நவம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யலாம். தற்பொழுதும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி திமுக எம்.பி வில்சன் அவர்கள் மாநிலங்களவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனிநபர் … Read more