தோனி என்ன வெளியே போக சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan jagadeesan

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வீரர் தான் நாராயண் ஜெகதீசன். இவர் 2018-ம் ஆண்டு சிஎஸ்கே நிர்வாகத்தால் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதன் பின் 2022-ம் ஆண்டு வரை சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது கொல்கத்தா அணி இவரை 90 … Read more

கிரிக்கெட் கேரியரில் சிறந்த தருணம் அது தான் !! தோனியை புகழ்ந்த ராகுல் !

KLRahul Praised MSD

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சொப்பர் கிங்ஸ் அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுவுள்ளது. இந்நிலையில், லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு … Read more

‘அந்த இளம் விக்கெட் கீப்பரால் தான் ஜெயிச்சோம்’ – வெற்றிக்கு பின் ருதுராஜ் பேசியது இதுதான் ..!

Ruturaj Gaikwad[file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்திய பிறகு சென்னை அணியின் கேப்டன் ஆன ருதுராஜ் கெய்க்வாட் வெற்றியின் காரணங்களை பற்றி பேசி இருந்தார். நடந்து கொண்டிருக்கின்ற ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் நேற்றைய 29-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனால் பேட்டிங் … Read more

CSKvsMI : டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வான்கடே  மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, … Read more

இது தான் நிஜ ஐபிஎல்! மும்பை கோட்டையில் கொடியை பறக்கவிடுமா சென்னை?

csk vs mi 2024

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அதிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகளில் எல் கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இந்த போட்டியை தான் எல்லா அணி ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு சென்னை … Read more

மும்பைனு வந்துட்டாலே ‘தல’ வேற லெவல் ..! ஏன் தெரியுமா ?

MSDhoni vs MI [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கபடும் போட்டிகளில் ஒன்று தான் மும்பை, சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டி. அதில் சென்னை அணியின் தோனி, மும்பை அணிக்கு எதிராக செய்த சில சம்பவங்ககளை பற்றி பார்ப்போம். ஐபிஎல் தொடரில் எல்-க்ளாசிக்கோ (EL-Classico) என்றால் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான். இந்த இரு அணிகளுக்கும் போட்டி என்றாலே அது ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இருக்கும் என்பது … Read more

தோனியை புகழ்ந்த ரஹானே ..! மும்பை போட்டிக்கு முன் அவர் பேசியது என்ன ..?

Ajinkya Rahane About MSDhoni[file image]

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன அஜிங்க்யா ரஹானே தற்போது சிஎஸ்கே நிர்வாகம் யூடூபில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்.எஸ்.தோனியை புகழ்ந்து பேசி இருக்கிறார். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், வருகிற ஏப்ரல்-14 ம் தேதி அன்று … Read more

மோசடி வழக்கில் தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கைது..!!

MSDhoni [file image]

MSDhoni : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஆன எம்.எஸ்.தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கடந்த செவ்வாய்கிழமை அன்று மோசடி வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இந்திய அணியில் வெற்றி நடைப்போட்டு சிறப்பான கேப்டனாக செயலாற்றியவர் தான் எம்.எஸ்.தோனி. இவரது கேப்டன்சியில் இந்திய அணி வெல்லாத ஐசிசி கோப்பைகள் கிடையாது என்பது நமக்கு தெரியும். சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் … Read more

‘இந்தியாவுக்கு கிடைத்த பெஸ்ட் கேப்டன் தோனி தான்’ !! தோனியை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பிர் ..!

Dhoni [file image]

ஐபிஎல் 2024 : இந்தியாவின் முன்னாள் கேப்டன் ஆன எம.எஸ்.தோனியை முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிர் புகழ்ந்து பேசி உள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் தற்போது கொல்கத்தா அணிக்கு வழிகாட்டியாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வருகிறார். இதனால் இந்த தொடரில் கொல்கத்தா அணி இது வரை 3-ல் 3 வெற்றிகளை பெற்று நன்றாக விளையாடி கொண்டு வருகிறது. மேலும், இன்றைய ஐபிஎல் போட்டியாக சென்னை அணியுடன் சேப்பாக்கில் மோதவுள்ளது. இந்நிலையில் கவுதம் … Read more

ICC : 13 வருடங்களுக்கு முன்பு இதே நாள் ! மறக்குமா நெஞ்சம் ..?

WCFinal [file image]

ICC : 13 வருடங்கள் முன்பு இதே நாளான ஏப்ரல்- 2 ல் அன்று தோனி தலைமையில் தான் இந்தியா அணி தனது 2-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. கடந்த 2011-ம் ஆண்டு இதே நாளான ஏப்ரல்-2 அன்று 50 ஓவர் உலககோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெற்று 2-வது முறை உலகக்கோப்பையை வென்றது இந்தியா அணி. கிரிக்கெட் உலகக்கோப்பை என்றாலே நமக்கெல்லாம் ஒரு தனி எதிர்ப்பார்ப்பாகவே இருக்கும் அப்படி தான் 2011 … Read more