கொரோனா குறித்து ஆஸ்திரேலிய நாளிதழிலின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா..!

கடந்த சனிக்கிழமையன்று கொரோனா விஷயத்தில் மோடி முறையாகக் கையாளவில்லை என குற்றச்சாட்டுகளை சுமத்தி பிலிப் ஷெர்வெல் என்பவர் எழுதிய கட்டுரையை முதலில் “தி டைம்ஸ்” இணையத்தில்தான் வெளியாகியிருந்தது. பின்னர், இது ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய ஊடகமான “தி ஆஸ்திரேலியன்” அந்த கட்டுரையின் இணைப்பைத் தமது ட்விட்டரில் பகிர்ந்து ஆணவம், தேசிய வெறி மற்றும் அதிகாரத்துவ இயலாமை ஆகியவை இணைந்து இந்தியாவின் இந்தநிலையை உருவாக்கியுள்ளன என எழுதியிருந்தது. அந்த கட்டுரையில், மேற்கு வங்கத் தேர்தலுக்கான அசன்சோலில் நடந்த தேர்தல் பேரணியில் … Read more

பிரதமர் மோடியுடன் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் சந்திப்பு.!

பிரதமர் மோடியுடன் ஜெனரல் பிபின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு ஆக்சிஜனை  கொண்டு செல்ல விமானப் படையும் உதவி செய்து வருகிறது. இந்நிலையில் … Read more

இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க ‘புதிய மன்மோகன்சிங்’ தேவை – சஞ்சய் ரவுத்

இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க ‘புதிய மன்மோகன்சிங்’ தேவை என சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், பொருளாதாரம் வீழ்ச்சியில் காணப்படுகிறது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் நரேந்திரமோடி பொருளாதார நெருக்கடியை கையாளும் முறை குறித்து, சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெறுவது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு தேவையான உயிர் … Read more

தேவையற்ற செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசி, ஆக்ஸிஜன் சேவைகளில் கவனம் செலுத்த மோடி அரசுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்..!

கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற சுகாதார சேவைகளில் கவனம் செலுத்துமாறு அவர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பி.ஆர் மற்றும் தேவையற்ற திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் பிற சுகாதார சேவைகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். அடுத்து வரும் நாட்களில் இந்த நிலைமை மோசமடையக்கூடும். நிலைமையை சமாளிக்க நாடு … Read more

தடுப்பூசி மூலப்பொருட்களுக்கான ஏற்றுமதி தடை.., முதலில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை.., வலுக்கும் எதிர்ப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒன்றாக தற்போது கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சில தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள தடுப்பூசி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துயுள்ளது. … Read more

அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் உடன் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி  ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று … Read more

மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் – பிரதமர் மோடி..!

மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்  பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின், வாசை என்ற இடத்தில் உள்ள விஜய் பல்லவ் என்ற கொரோனா மையத்தின் அவசர சிகிச்சை பிரிவில், இன்று அதிகாலை 3:15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 21 பேர் … Read more

#BREAKING: நாளை மாநில முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் ஆலோசனை. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை இது போன்ற  பல புகார்கள் எழுந்து வருகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் நாளை காலை 9 மணிக்கு அவசர ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபடுகிறார். இந்த ஆலோசனை … Read more

#BREAKING: மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி..!

மேற்கு வங்க பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார். மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடி ரத்து செய்தார். கொரோனா தடுப்பு தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுவதால் மேற்கு வங்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஏழு மற்றும் எட்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையில்  மேற்கொள்ள பிரதமர் மோடி இருந்தார். ஆனால், கொரோனா அதிகரித்துள்ளதால் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், கொரோனா மோசமாக … Read more

யெச்சூரி மகன் மறைவு.., பிரதமர் மோடி இரங்கல்..!

மகனை இழந்து வாடும்  சீதாராம் யெச்சூரி ஜி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி என மோடி தெரிவித்துள்ளார்.  சீதாராம் யெச்சூரி மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் தான் குர்கானுக்கு மாற்றப்பட்டார். இரண்டு வரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி … Read more