இந்த பிரச்சனையில் தலைமைதான் உரிய முடிவெடுக்கும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகே கூட்டணி கட்சி குறித்து தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் நினைத்தனர் என்றும் … Read more

அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வி!!

சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வி. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை ராயபுரம் தொகுதியில் … Read more

இது கருத்துக்கணிப்பு அல்ல.. கருத்து திணிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தமிழக சட்டபேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திரைப்பட இயக்குனர் கே.வி ஆனந்த் மற்றும் குணசித்திர நடிகர் செல்லத்துரை மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், நேற்று கருத்து கணிப்பு என்ற பேரில் ஒரு கருத்து திணிப்பு நடைபெற்றுள்ளது என விமர்சித்தார். இது கருத்து கணிப்பே இல்லை என்றும் பல கட்டங்களில் இந்த கருத்து திணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி அதிமுக … Read more

வாக்கு எண்ணும் நாளில் தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

எந்த சூழலிலும் தபால் வாக்கு பெட்டிகளை மே 1ம் தேதி திறக்கக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்றும் அதற்கு முன்பாக மே 1ம் தேதி எந்த சூழலிலும் ஸ்டார்ங் ரூம் திறக்க கூடாது … Read more

“வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்” – எம்ஜிஆர் பாடலைபாடி அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்.!

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற எம்ஜிஆர் பாடலைபாடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார். ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் சாலையோர கடைகளில் டீ குடித்தும், மேளம் அடித்தும் மற்றும் குடத்தில் தண்ணீர் பிடித்து நூதன முறையில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று பிரச்சாரத்தின்போது எம்ஜிஆர் பாடலை பாடினார். தம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களுக்கு சவால்விடும் வகையில் வெற்றி … Read more

அறிக்கையில் வாபஸ் பெற வலியுறுத்துவோம் – சிடி ரவி., இதுதான் எங்கள் நிலைப்பாடு – அமைச்சர் ஜெயக்குமார்

எங்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கிடையாது என சிடி ரவி தெரிவித்த கருத்துக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிட … Read more

வார்த்தைகள் அளந்து பேசாமல் இருந்தால் அதற்குரிய பதிலடி கிடைக்கும் – அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

பக்குவப்பட்ட அரசியல்வாதியாக எல்.கே.சுதீஷ் பேசவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய எல்.கே.சுதீஷ், நாங்கள் கேட்ட தொகுதிகளும், எண்ணிக்கைகளும் தராத காரணத்தினால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்து டெபாசிட்டை இழப்பார்கள் என்றும் அதிமுகவின் கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கு செயல்படவில்லை, பாமாவிற்கு ஸ்லீப்பர்செல்லாக இருந்து கொண்டு கொள்கை பரப்பு … Read more

அமமுக குள்ளநரிகள் கூட்டம்., அதிமுக சிங்கங்கள் இருக்கின்ற கூட்டம் – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் காலத்தில் இருந்த எழுச்சியை தற்போதும் காண முடிகிறது என்று அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய தலைமை செயலகத்திற்கு வந்தர்களை காண்பித்து தெரிவித்துள்ளார். இந்த எழுச்சியை பார்க்கும் போது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அலை தமிழகத்தில் வீசுகின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் காணாமல் போய் எல்லா தொகுதிகளிலும் … Read more

அதிமுகவினரை அழைக்கவில்லை, அமமுகவினரையே அழைத்துள்ளார் – அமைச்சர் ஜெயக்குமார்

உடன்பிறப்புகள் ஒன்றாக இணைவோம் என்று சசிகலா கூறியது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் தினமான இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் இருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. இதன்பின் பேசிய சசிகலா, 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும். அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் நான் … Read more

திமுக ஆட்சியில் கொடுத்த டிவி நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு – அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் கொடுத்த டிவி தற்போது நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு தருகிறேன் அமைச்சர் ஜெயக்குமார் சவால். சென்னையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவரது முடிவில் உறுதியாக இருந்தால், கடைசி வரை சட்டமன்றத்துக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மத்திய அரசு … Read more