மெஸ்ஸி ஜெர்சிகள் ரூ.65 கோடிக்கு விற்பனை.. ஒரு ஜெர்சி விலை எவ்வளவு தெரியுமா ..?

லியோனல் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை 2022 பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு உலகக்கோப்பையின் போது லியோனல் மெஸ்ஸி  அணிந்திருந்த  6 ஜெர்சிகள் 78 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.64.74 கோடி) விற்பனையாகியுள்ளன. அதாவது அவரது ஜெர்சி ஒன்றின் விலை சுமார் ரூ.10.5 கோடி என கூறப்படுகிறது. மெஸ்ஸி மீது ரசிகர்கள் மத்தியில் … Read more

2023 பலோன் டி’ஓர் விருது : சிறந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி.!

Ballon d'or award - Messi

கால்பந்து உலகில்  உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பலோன் டி’ஓர் விருதானது, கால்பந்து விளையாட்டில் ஒவ்வொரு ஆண்டு சிறப்பாக செயல்படும் வீரர்கள், அணிகளுக்கு வழங்கபடுகிறது.  இந்த விருதானது பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்தாண்டும் கால்பந்து உலகில் சிறந்த வீரர்களுக்கு பலோன் டி’ஓர் விருதுகளை பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்குக்கான பலோன் டி’ஓர்  விருது , அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. … Read more

அப்பாவைப் போல் மகள்! தோனி மகளுக்கு மெஸ்ஸி அனுப்பிய ஜெர்சி.!

எம் எஸ் தோனியின் மகளான ஜிவா தோனிக்கு, அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார்.  பரபரப்பாக நடந்து முடிந்த கத்தார் உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. உலகெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், அர்ஜென்டினா அணியை ஆதரித்து வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அர்ஜென்டினாவும் உலகக்கோப்பையை வென்றது, மெஸ்ஸியும் கோல்டன் பால் விருது வென்றார். உலகக்கோப்பை முடிந்துள்ளதால் தற்போது மெஸ்ஸி, தனக்கும் அணிக்கும்  ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இந்நிலையில் … Read more

மெஸ்ஸியின் கால் தடங்கல் எங்கள் மைதானத்தில் பதிய வேண்டும்.! பிரேசிலில் இருந்து வந்த அழைப்பு.! 

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு … Read more

மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்! சேவாக்கின் வேடிக்கை மீம் வைரல்.!

அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பின், மெஸ்ஸி குறித்து சேவாக் இன்ஸ்டாவில் பகிர்ந்த மீம் வைரலாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தன் பங்கிற்கு 2 கோல்களை அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பேவிற்கு அடுத்தபடியாக 7 கோல் அடித்து மெஸ்ஸி 2-வது இடத்தில் இருக்கிறார், மேலும் அவர் இரண்டாவது முறையாக … Read more

உலகக்கோப்பை பைனலில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல்! செல்லாது என ரசிகர்கள் கதறல்.!

பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலககோப்பையின் இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நடந்த பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் 3-வது கோலாக மெஸ்ஸியின் இரண்டாவது கோல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கோல் ஆப்சைடு கோல் என கூறப்பட்டாலும் … Read more

National holiday:இன்று அர்ஜென்டினாவில் பொதுவிடுமுறை வெற்றியை கொண்டாட தயாராகும் மெஸ்ஸி !

கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்த இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்று டை-பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது.இதில் மெஸ்ஸி தலைமையிலான  சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்து கொள்ள உள்ளது.

அசாமில் பிறந்த மெஸ்ஸி! பிறகு ட்வீட்டை அழித்த காங்கிரஸ் எம்.பி.!

காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், மெஸ்ஸி அசாமில் பிறந்ததாக ட்வீட் செய்து பிறகு அதனை அழித்துள்ளார். கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்த காங்கிரஸ் காட்சியைச்சேர்ந்த அசாம் எம்.பி அப்துல் காலிக், அடிமனதிலிருந்து வாழ்த்துகள் தெரிவிக்கிறேன், மேலும் மெஸ்ஸிக்கும் அசாமிற்கும் உள்ள தொடர்புக்கு பெருமையடைகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் அசாம் தொடர்பா? என கேட்டதற்கு அவர் ஆம்! மெஸ்ஸி, அசாமில் தான் பிறந்தார் என பதில் ட்வீட் … Read more

ஃபிஃபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி, படைத்த பல்வேறு சாதனைகள்!

ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல சாதனைகளை படைத்துள்ளார். கத்தாரில் நடந்த ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடரின்  இறுதிப்போட்டியில் நேற்று அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி இந்த உலககோப்பையின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் லியோனல் மெஸ்ஸி, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். மெஸ்ஸி அதிக உலககோப்பைகளில் பங்கேற்று அதாவது 26, ஃபிஃபா உலகக் கோப்பைகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் 19 உலகக் கோப்பை … Read more

அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்…புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்…!

உலகக் கோப்பை கால்பந்து 2022 -இன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அதிரடியாக விளையாடி மெஸ்ஸியின் அணியான அர்ஜென்டினா வெற்றிபெற்றது. இதனையடுத்து பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் டிவிட்டரில் மெஸ்ஸியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்ஸியின் மூலமாகப் புதிதாகப் … Read more