இயல்பு நிலைக்கு திரும்பிய மாமல்லபுரம்…!

பிரதமர் மோடி , சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் சந்திப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்றுவரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இருநாட்டு தலைவர்களும் நேற்று உடன் சந்திப்பு முடிந்ததால் இன்று முதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரம் வந்தனர். அன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தனர்.  இவர்களின் பாதுகாப்பு காரணமாக சுற்றுலாத் தளங்களில் … Read more

பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க  காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று வருகை தந்தார்.அங்கு சென்ற அவருக்கு  பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள சிறப்புகளை எடுத்து விளக்கினார்.இதனைத்தொடர்ந்து இரு தலைவர்களும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த பின்பு ஹோட்டலுக்கு சென்றார்கள். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை 2வது நாளாக சந்திக்க காரில் கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி … Read more

தமிழக உணவு வகைகளை ருசிக்க காத்திருக்கும் சீன அதிபர் !

இரவு விருந்தில் சீன அதிபருக்கு தமிழக உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. கடற்கரை கோயிலில் கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர  மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு  நினைவு  பரிசு வழங்கினார் .இதற்கு பின் சீன அதிபருக்கு இரவு விருந்தில் தமிழக உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன.இந்த விருந்தில் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளான  தக்காளி ரசம், சாம்பார், கடலைக்குருமா, தோசை, இட்லி, பொங்கல், வடை, கவுனி அரிசி அல்வா, உள்ளிட்ட உணவுகள்  வழங்கப்பட உள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

நினைவுப் பரிசுகளை சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார்.மேலும் தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.      

நிகழ்ச்சியை ரசிக்கும் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் கண்டு களித்து வருகின்றனர். பிரதமர் மோடி  தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் சந்தித்தார்.பின் அவருக்கு அங்குள்ள சிறப்புகளை விளக்கினார்.பின்னர்  மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்து வருகின்றனர் .பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் கண்டு ரசித்தனர்.

வெண்ணெய் உருண்டை பாறை முன் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் புகைப்படம்..!

பிரதமர் மோடி வழக்கமாக அணியும் குர்தாவை அணியாமல் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள சிறப்பங்களின் சிறப்பை சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு மோடி விளக்கம் அளித்தார்.அப்போது மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பின்னர்  வெண்ணெய் உருண்டை பாறை முன் நின்றவாறு பிரதமர் மோடி, … Read more

சீன அதிபருக்கு சிற்பங்களை பற்றி விளக்கிய மோடி..!

மாமல்லபுரத்தில் சீன அதிபர் அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை சுற்றி பார்த்தனர். அப்போது பிரதமர் மோடி சீன அதிபருக்கு மாமல்லபுரத்தில் உள்ள  சிற்பங்கள் குறித்து விளக்கினார். இதையடுத்து அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள பல சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு மோடி விளக்கம் அளித்தார்.

வேட்டி, சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி..!

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வந்தார் பிரதமர் மோடி. பின்னர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு சென்னை வந்தார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளத்திற்கு … Read more

சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர் ஷி ஜின்பிங்..!

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அவருக்கு மேளதாள , கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட சொகுசு காரில் கிண்டி கிராண்ட் ஹோட்டலுக்கு சென்றார். ஹோட்டலில்  சில மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு ஷி ஜின்பிங் தற்போது மாமல்லபுரம் புறப்பட்டுள்ளார். சோழா ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் … Read more

சீன அதிபரை அழைத்துச் செல்ல விமான நிலையம் சென்ற குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள்

சீன அதிபரை அழைத்துச் செல்ல பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளது.  சீன அதிபர் வருகையையொட்டி சென்னை ஜிஎஸ்டி சாலை, விமானநிலையம் முதல் கிண்டி சோழா நட்சத்திர ஓட்டல் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மேலும்  சின்னமலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் சற்று நேரத்தில் சென்னை வருகிறார். சீன அதிபரை அழைத்துச் செல்ல குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளது.