மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி….!

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த 100 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல், ஒரு சில தினங்களில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்பொழுது மீண்டும் கமல்ஹாசன் சென்னை போரூரில் … Read more

#Breaking: வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்க்கு கொரோனா தொற்று உறுதி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து அவருக்கு கொரோனா … Read more

#ElectionBreaking: புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் மநீம கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய கட்சியின் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி காட்சிகளுக்கான தொகுதிகளையும், வேட்பாளர்களின் பட்டியல்களையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஜ்பவன் – பர்வத வர்தினி  இந்திரா … Read more

புதிய கல்விக் கொள்கை.. நாட்டின் GDP-ல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது- கமல்!

நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. அது, பல்வேறு அறிவிக்களை கொண்டதாகவும், கல்வி முறையில் பெரிய மாறுதல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது. இதற்க்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், புதிய கல்விக் கொள்கையில், … Read more

அப்போதும் நம்பினேன்.! இப்போதும் நம்பினேன்.! ஏமாற்றிவிட்டீர்கள்.! கமல் வெளியிட்ட புதிய அறிக்கை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில்  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக செயல்படுவதை குறிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு (அ)  டார்ச் லைட் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் அகல்விளக்கு ஏற்றினர். பிரதமரின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஓர் அறிக்கை … Read more

கமலஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கினார் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி!

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவரது பெயர் நாதுராம் கோட்ஸே என என குறிப்பிட்டார். இதற்க்கு பாஜக, அதிமுக, இந்து முன்னணி அமைப்புகள் என பலரும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, வழக்குகளும் போடப்பட்டன. இதன் காரணமாக கமல்ஹாசன் உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். DINASUVADU

நடிகர் கமலஹாசன் தனது வாழ்க்கையில் விரும்பாத ஒரே நூல் இதுதானாம்..!

தற்போது  சில தினங்களுக்கு முன்னர் இந்தியா ட்விட்டர் நடத்திய ‘வணக்கம் ட்விட்டர் ‘ என்ற நிகழ்ச்சியில் , நடிகர் கமல்ஹாசனிடம் கேள்விகளை கேட்க #AskKamalHaasan என்ற ஹேஸ்டேக்கை அறிமுகப்படுத்தினார். இதில் பலரும் அவரிடம் கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு கேள்வி நீங்கள் படித்த நூலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய நூல் என கேட்டபோது.கமலஹாசன் தான் விரும்பாத நூலும் , தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்று பதிவிட்டார்.

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது: நெல்லை வழக்கறிஞர் பேட்டி…!!

நெல்லை:கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கூடாது. ஆணையம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் வள்ளியூர் வழக்கறிஞர் சேவியர் என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் ஈரோடில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்  மக்கள் பணிகளை அரசு செய்யாத காரணத்தினாலேயே, தாங்கள் அரசியலுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை கமல்ஹாசன் ஏற்றிவைத்தார். பின்னர், தொண்டர்களிடையே பேசிய அவர், நீர்நிலைகளை தூர்வாருதல், பேருந்து நிழற்குடை அமைத்தல் என நிறைய சின்ன சின்ன வேலைகள் செய்ய வேண்டியிருப்பதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கமல்ஹாசன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியில் கலந்துரையாடல்!

  சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ஈரோடு மாவட்டம் சிக்கரசம்பாளையம் சென்ற கமல்ஹாசன், அங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான  அமைக்கப்பட்டுள்ள பள்ளியை பார்வையிட்டார். மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்த கமல்ஹாசன், அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய கமல், மாற்றுத்திறனாளி குழந்தைகளை அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.