எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது.! மக்களும் பங்கேற்க வேண்டும்.! – முதல்வர் கோரிக்கை.!

எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது. அரசு திட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். அதற்கான திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம். – முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் விழாவில் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக … Read more

அர்ஜென்டினா சாம்பியன் ! மெஸ்ஸி க்கு வாழ்த்துக்கள் – மு.க.ஸ்டாலின்

உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்  மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டம் நடைபெற்றது.இரு அணிகளும் இருமுறை சாம்பியன் என்பதால் யார் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்ற ஆவலுடன் போட்டி நடைபெற்றது. முதல் பாதியில் 2-0 என்று அர்ஜென்டினா முன்னிலை பெற்று இருந்த  நிலையில் … Read more

பொங்கலுக்கு பிறகு தான் 2023 முதல் சட்டப்பேரவை கூட்டம்.! கரணம் இதுதான்.!

மாண்டஸ் புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தமிழக சட்டப்பேரவை பொங்கல் விடுமுறை கழித்து தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழக சட்டப்பேரவையானது  ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி முதல் வாரம் தொடங்கும். அதன் பிறகு பொங்கல் விடுமுறை விடப்படுவது வழக்கம் . ஆனால் வரும் 2023வது வருடம் இதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொங்கல் விடுமுறை கழித்து தான் 2023இன் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மாண்டஸ் புயலினால் … Read more

12 கோடி செலவில் அதிநவீன ஐஸ் கிரீம் ஆலை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

சேலத்தில் ஆவின் பண்ணை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஐஸ்க்ரீம் ஆலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  சேலத்தில் செயல்படும் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தமிழக அரசனது 12 கோடி ரூபாய் செலவில்  அதிநவீன ஐஸ்கிரீம் ஆலை ஒன்றை புதியதாக அமைத்துள்ளது. இந்த அதிநவீன ஐஸ் க்ரீம் ஆலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை  தலைமை செயலகத்தில் இருந் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த அதிநவீன ஐஸ் க்ரீம் ஆலையினால் கோவை, ஈரோடு, … Read more

மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதும் மீண்டுள்ளது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது. மழை அதிமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. – முதல்வர் ஸ்டாலின் பேட்டி.  வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல … Read more

மதுரை விமானநிலைய நுழைவு வாயிலில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.!

மதுரையில் பெருங்குடி விமான நிலைய நுழைவாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இன்று மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிலும், அண்ணல் அம்பெத்கர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில், தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு பணிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான லோகோ-வை வெளியிட்டு பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். அடுத்ததாக, … Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா.? போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த விளக்கம்.!

மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் போன்ற திட்டங்களால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றாலும், கட்டணம் உயர்த்தப்படாது. மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை … Read more

நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

நடமாடும் காய்கனி அங்காடி வாகனங்கள் மூலம் காய்கனி விற்பனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் இன்று 20 நடமாடும் காய்கனி அங்காடி வாகனங்கள் மூலம் காய்கனி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அந்த நடமாடும் வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் காய்கனி அங்காடி சேவையானது கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடங்கபட்டுள்ளது. இந்த சேவை மூலம் பொதுமக்களின் வீட்டிற்கு அருகில் … Read more

ஜி20 மாநாடு.! பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.! டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

ஜி20 மாநாடு குறித்து விவாதிக்க இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும். அந்த வகையில், இந்த வருட … Read more

8 உயிர்கள் பலியானதுக்கு திமுக அரசே காரணம்.! அண்ணாமலை சரமாரி குற்றசாட்டு.!

அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளதற்க்கு திமுக அரசு தான் காரணம். – அண்ணாமலை குற்றசாட்டு.  ஆளும் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் இயற்றி இருந்தது. அதற்கு ஆளுநர் ரவி கையெழுத்திட்டார். அதற்கான அரசாணையை தமிழக பிறப்பிக்கவில்லை . அதர்க்கடுத்ததாக, சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டமாக இயற்றியது. இதற்கு இன்னும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை. இந்த சட்டம் குறித்து ஆளுநர் ரவி … Read more