டீசருக்கே ப்ரோமோ விட்ட லைகா! 2.O உடன் வெளிவரவுள்ள சிம்பு பட டீசர்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளிவரவுள்ள 2.O எனும் பிரமாண்ட திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அடுத்ததாக சிம்பு படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரின்டி தாரேடி படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் டீசர் நவம்பர் 29இல் வெளியாக உள்ளது. அதேநாளில் 2.O திரைப்படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடதக்கது. source : cinebar.in

கஜா புயல் நிவாரண நிதியாக 1 கோடி நிதியளித்த 2.O படத்தயாரிப்பு நிறுவனம்!

கஜா புயலினால் டெல்டா மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு தண்ணீருக்காக ரெம்பவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் தங்களால் முடிந்த பொருளுதவி,நிதியுதவி என உதவி வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்தவர்களும் பலரும் உதவி வருகின்றனர். சூர்யா குடும்பத்தினர் 50 லட்சம், விஜய் சேதுபதி 25 லட்சம், சிவகார்த்திகேயன் 20 லட்சம், ஜிவி.பிரகாஷ் குமார் 2 லாரி நிவாரண பொருட்கள், விஜய் 40 லட்சம் என நிதியுதவி பலரும் அளித்து வருகின்றனர். இதேபோல தமிழ் பட தயாரிப்பு நிறுவனமான … Read more

அர்னால்ட்டிற்க்கு பதிலாக இவரைதான் நடிக்க கேட்டேன் : இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இம்மாதம் 3ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறுகையில், முதலில் 2.Oவில் வில்லனாக நடிக்க வைக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க வைக்க முயற்ச்சிகள் … Read more

தீபாவளிக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டார் பட ட்ரெய்லர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 29இல் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர்  வெளியானது. இந்த டீசர் 3D மற்றும் 2D இல் வெளியாகி இருந்தது. இந்த 3D டீசர் பல 3D தியேட்டர்களில் வெளியானது இந்த டீசரை காணவே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. ஆதலால் தீபாவளிக்கு வெளியாக … Read more

வெளியானது ஷங்கரின் '2.O' படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாக  இருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  இப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் டீசர் ஏற்கனவே வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் படத்தில் வேலை பார்த்த டெக்னீசியன்கள், படத்தில் சில காட்சிகள் என பிரமாண்டமாக வீடியோ … Read more

இன்று காலை 2.O ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் ஸ்டார் அக்ஷ்ய்குமார் நடித்திருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 400கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பட்ததின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.O படத்தின் ஸ்நீக் பீக் (சில காட்சிகள்) காட்சிகளை இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. … Read more

செக்கசிவந்த வானம் முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா??

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம் . இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 8 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. DINASUVADU

படுவேகமாக வளர்ந்துவரும் சிம்பு – சுந்தர்.சி படம்!!

தெலுங்கில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அத்தரின்டிகி தாரேடி. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாகவும், நதியா முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர். த்ரிவிக்ரம் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தற்போது தமிழில் தயாராகிறது. இப்பபடத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் சுந்தர்.சி இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. தற்போது படக்குழு ஜார்ஜியாவில் படத்தை எடுத்து வருகிறது. DINASUVADU

காலா படத்தின் மூலம் தனுஷுக்கு அடித்த ஜாக்பாட் !

ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் கோடைகால விடுமுறை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இப்படத்தில் ரஜினி ஸ்லம் ஏரியா வில் வாழும் காட்பாதராக நடித்துள்ளார். இந்நிலையில் காலா திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஒளிபரப்பு உரிமைத்தை 75 கோடிக்கு ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நிறுவனத்திடமிருந்து 125 கோடிக்கு லைக்கா நிறுவனம் காலா திரைப்படத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

நடிகர் தனுஷுக்கு அடித்த ஜாக்பாட் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான காலா  டீசருக்கு ரஜினி  ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது காலா படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 75 கோடி பட்ஜெட்டில் உருவான காலா படத்தை லைகா நிறுவனம் 125 கோடி ருபாய்க்கு வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.