உள்ளாட்சி தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை … Read more

#BREAKING : உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  உள்ளாட்சி தேர்தலுக்குத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்.இதனால் கடந்த 7 ஆம் தேதி தமிழக மாநில தேர்தல் ஆணையம்,முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும்,இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தது.மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் தற்போது  நடைபெறவில்லை என்று … Read more

உள்ளாட்சி பதவிகள் ஏலம் : அதிகாரிகள் விசாரணை

ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி  ஏலம்விடப்பட்டது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  பதவிகள் ஏலம்போன தகவல் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.  தமிழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 தேதி தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது. … Read more

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

ஊராட்சி தலைவர் பதவி விலை ரூ.50 லட்சத்துக்கும்,துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்விடப்பட்டது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறுகிறது .வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் கடலூர் … Read more

அதிமுகவுடன் இணைந்து போட்டியா? தனித்து போட்டியா? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்  ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதற்காக கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது. ஆனால்  அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம், அதிமுக கூட்டணியில் இணைந்து … Read more

உள்ளாட்சித் தேர்தல் நடத்த எதிர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்த  வழக்கை உச்சநீதிமன்றம் இன்று  விசாரணை நடத்துகிறது. திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.இதனால் தமிழக மாநில தேர்தல் ஆணையம் ,முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தது.மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் … Read more

உள்ளாட்சித் தேர்தல் : அமமுகவிற்கு தனிச்சின்னம் கிடையாது

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு தனிச்சின்னம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. ஆனால் இதற்கு இடையில் அமமுகவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினாரக்ள்.ஏற்கனவே தேர்தல் தோல்வி ஒரு புறம் அமமுகவை துரத்த மறுபுறம் முக்கிய நிர்வாகிகள் விலகல் அவரை துரத்தியது.இதன் விளைவுகளால் சமீபத்தில் … Read more

#BREAKING: மறைமுகத் தேர்தலுக்கு எதிர்ப்பு -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு  அவசர சட்டம் பிறப்பித்தது.  மறைமுக தேர்தலுக்கு எதிரான திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசு மேயர்,நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது.இந்த மறைமுகத் தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன் தொடர்ந்தார். அவரது வழக்கில்,மேயர் மற்றும் நகராட்சி தலைவர் … Read more

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.நேற்று  ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நேற்று … Read more

அதிமுக -பாஜக : கூட்டணியின் நிலை என்ன ? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவிடம் பேசியுள்ளோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது.ஆனால் மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை.இதன் பின்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட்டணி தொடர்ந்தது.ஆனால் தற்போது  ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதற்காக கட்சிகள் அனைத்தும் தயாராகி … Read more