இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வேண்டுமா..? அப்போ உடனே “எலுமிச்சை ஊறுகாய்” சாப்பிடுங்க..!

ஊறுகாய் இந்தியர்கள் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். நம் வாழ்வில் நாம் அனைவரும் விரும்பி உண்ணும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஊறுகாய்களில் ஒன்று எலுமிச்சை ஊறுகாய். அதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளுடன் உங்கள் உடலின் தேவையை பூர்த்தி செய்ய இது உதவுகிறது. மேலும் ஒரு நபர் தன் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய பல ஆரோக்கிய நன்மைகள் எலுமிச்சை ஊறுகாயில் உள்ளன. நீங்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய எலுமிச்சை ஊறுகாயின் நான்கு … Read more

50 ரூபாயிலிருந்து அதிகரித்து 200 ரூபாய்க்கு விற்கப்படும் எலுமிச்சை ..!

பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சமையல் பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் காய்கறி சந்தையில் தற்போது எலுமிச்சை விலை ஒரு கிலோ 200 ரூபாய் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்கி உள்ளதால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரத்து குறைவு மற்றும் … Read more

எலுமிச்சையை அதிகம் உபயோகிப்பதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்…!

எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு வைட்டமின் சி அதிக அளவில் கிடைக்கிறது என்பது அனைவருமே அறிந்தது தான். பெரும்பாலும் சில சமயங்களில் எலுமிச்சம்பழம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல், குளிர் பானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில அழகு சம்பந்தப்பட்ட செயல்முறைகளுக்கும் எலுமிச்சை சாறு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சையை உட்கொள்வதே நமது உடலுக்கு … Read more

பெண்கள் முகத்தில் வளரும் முடிகளை அகற்றுவதற்கு இந்த இயற்கை குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்…!

பெண்களுக்கு முகத்தில் ஆங்காங்கு சிறு சிறு உரோமங்கள் வளர்வது இயற்கையான ஒன்று தான். குறிப்பாக கன்னங்கள், உதட்டின் மேல் புறம் மற்றும் நெற்றிக்களில் அதிகம் முடி வளரும். முகத்தில் உள்ள ரோமங்கள் அதிக அளவில் வெளியில் தெரிவதால், இதை நீக்குவதற்காக சிலர் செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால், அவை முழுமையான தீர்வை நமக்கு தராது. ஆங்காங்கு முடி மீண்டும் வளர தொடங்கும். எனவே இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள … Read more

வீட்டிலேயே ஆரோக்கியமான மூலிகை டீ தயாரிப்பது எப்படி?

மழை நேரத்தில் அல்லது காலையில் எழுந்ததும் சூடாக டீ குடிக்க வேண்டும் என்று அனைவருக்குமே தோனும். ஆனால் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நமது உடலில் ஏற்படக்கூடிய ஜலதோஷம், இருமல் ஆகியவற்றை நீக்க இஞ்சி எலுமிச்சை ஆகியவற்றை வைத்து எவ்வாறு மூலிகையை வைத்து எப்படி செய்வது என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இஞ்சி எலுமிச்சை சாறு தேன் தண்ணீர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் … Read more

எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது – வதந்தியை நம்பியவர் உயிரிழப்பு!

எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி ஊற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் இல்லாமலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து வருகின்றனர். எனவே கொரோனா வராமல் தடுப்பதே வழி என … Read more

செலவே இல்லாமல் சிகப்பழகான உதடு பெற சில இயற்கை வழிமுறைகள் இதோ!

உடலின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதாக இருந்தாலும் முகத்தின் அழகை பிரதிபலிக்கும் கூடியது உதடு என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். இதற்கான சில இயற்கையான குறிப்புகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிகப்பழகான உதடுகளுக்கு …. உதடுகளை மென்மையாக சுத்தமாக பராமரித்தால் இயற்கையான சிகப்பழகு உடன் நாம் வைத்திருக்க முடியும். சிலருக்கு இயற்கையிலேயே உதடுகள் சற்று கருப்பு நிறமாக காணப்படும். இது அவர்களுக்கு பிடிக்காது, இதற்காக சில செயற்கை … Read more

கலர் ஆகணும் ஆனால் செலவாகக் கூடாது! செலவே இல்லாத சில இயற்கை டிப்ஸ் இதோ!

தற்போதைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே அழகாக வெண்மை நிறமாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கமாகிவிட்டது. இதற்காக பியூட்டி பார்லர் சென்று செயற்கையான கிரீம்களை பயன்படுத்தி அதனால் பக்க விளைவுகளை சந்தித்து உள்ளவர்கள் தான் அநேகர். ஆனால் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களை வைத்து எப்படி வெள்ளையாவது என்றும் அதனை நிலைத்திருக்க வைப்பது எப்படி எனவும் பார்க்கலாம் வாருங்கள். இயற்கை டிப்ஸ் சில இதோ முதலில் கடலைமாவுடன் எலுமிச்சம்பழச்சாறு மற்றும் லேசாக 2 டீஸ்பூன் தக்காளி … Read more

தினமும் காலையில் இதை செய்யுங்கள், விரும்பிய உடல் அழகு பெறலாம்!

தற்போதைய நவீன காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருமே தாங்கள் லேசாக உடல் எடை கூடிவிட்டால் குண்டாக இருக்கிறோம், நக்கல் அடிப்பார்களோ என்ற அச்சத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்கை முறையை தேடி ஓடுகிறார்கள். சிலர் ஜிம் சென்று உடற்பயிற்சி மூலமாக உடல் எடையை குறைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் என்னால் வெளியில் செல்ல முடியாது வீட்டிலிருந்தே என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள். … Read more

எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு – குறிப்புகள் உள்ளே!

நமது முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க செயற்கை முறைகளை பின்பற்றுவதை தவிர்த்து இயற்கையில் கிடைத்துள்ள எலுமிச்சை பழம் தரும் நன்மைகள் அறிவோம். எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு முதலில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதன் சாற்றி பிழிந்து அதில் இரண்டு மூன்று துளி நீர் சேர்த்து முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வர, முகத்தில் சூரிய ஒளியால் வந்த கருமை மறையும். எலுமிச்சை சாற்றுடன் தயிர் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் … Read more