தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு அறிவிப்பு!

tamilnadu congress

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது. இதில், குறிப்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிலும், இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அதனால், மிகுந்த … Read more

2024 தேர்தல் கூட்டணி நிலவரம்.! தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசிய தலைமை அழைப்பு.!

KS Alagiri - mallikarjuna karge

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியில் கட்டமைத்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டங்களும் அப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் அடுத்த பயணம் மணிப்பூர் டு மும்பை- காங்கிரஸ் அறிவிப்பு ..! அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும், … Read more

தேர்தல் அதிகாரி விஷயத்தில் மத்திய அரசு விதிமீறியதால் உச்சநீதிமன்றம் கேள்வி.! கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு.!

தேர்தல் அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு விதிமீறி செயல்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்தது தொடர்பாக அண்மையில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் கேட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும் வழிமுறைகள் குறித்தும், தற்போதைய தேர்தல் அதிகாரியை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இது குறித்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இன்று காங்கிரஸ் … Read more

காங்கிரஸ் அலுவலகத்தில் சலசலப்பு எதிரொலி.! நாங்குநேரி எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்.!

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த சலசலப்புக்கு காரணம் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் என கூறி அவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சி தலைமையானது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட 8 வட்டார தலைவர்களையும் மாற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி … Read more

காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்.!

திருநெல்வேலிக்கு புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்தது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் , சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.  வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சி தலைமையானது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளராக கே.பி.கே.ஜெயக்குமார் அவர்களையும், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பழைய 8 வட்டார தலைவர்களையும் நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ … Read more

கூட்டணி வேறு.! கொள்கை வேறு.! திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.! காங்கிரஸ் தலைவர் பேட்டி,!

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்த்தில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையை அடுத்து, நளினி உள்ளிட்ட 6 பேர் சனிக்கிழமை விடுதலை ஆகினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சென்னை கிண்டியில் சந்தித்து குறிப்பிட்டார். அதில், ‘ ராஜீவ் … Read more

10 சதவீத இட ஒதுக்கீடு.! தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு.!

10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து இருந்தாலும், தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உயர்பிரிவு வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக … Read more

மோடி, அமித்ஷாவை போல ராஜீவ் காந்தி கூறியதில்லை.! காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி.!

காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இந்தி மொழி திணிப்பை ஆதரித்தது கிடையாது. என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.  நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் சந்திப்பில் பேசுகையில், ‘ ஹிந்தி மொழியை கட்டாயம் என பாஜக அரசு கூற வில்லை. அப்படி கூறினால், தமிழக பாஜகவே எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. ‘ என காங்கிரசை குற்றம் சாட்டி இருந்தார்.   இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக … Read more

#Breaking:கும்பகோணம் மேயர் வேட்பாளர் இவர்தான் – காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!

கும்பகோணம்:மாநகராட்சியில் மேயர் வேட்பாளராக கே.சரவணன் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி,மற்றும் பேரூராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாளை மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் … Read more

3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை- கே.எஸ் அழகிரி..!

தமிழத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாநகராட்சி வார்டில் 22, நகராட்சி வார்டில் 56,  பேரூராட்சிவார்டில்  230  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், பாஜக தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  இந்நிலையில், தமிழத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை என்று தமிழக … Read more