கேரளாவில் 18 ஆப்பிள் மொபைல்கள், 10லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பறிமுதல்.!

துபாயில் இருந்து தரையிறங்கிய 2 பயணிகளிடமிருந்து 18 ஆப்பிள் மொபைல் போன்கள், 2000 சிகரெட்டுகளை கோழிக்கோட்டின் விமான புலனாய்வு பிரிவு பறிமுதல் செய்தது. மேலும், துபாயில் இருந்து வந்த மற்றொரு பயணியிடமிருந்து ரூ .10.09 லட்சம் மதிப்புள்ள 201 கிராம் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர் கொச்சியின் சுங்கதுறை ஆணையம்.

இரு பயணிகளுக்கு கொரோனா.! மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை.!

விமான விபத்தில் மீட்கப்பட்ட நபர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதால், மீட்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள சி.ஐ.எஸ்.எஃப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீட்கப்பட்ட நபர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதாம். ஆதலால், மீட்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள சி.ஐ.எஸ்.எஃப் … Read more

விமான விபத்தில் கணவர் இறந்த செய்தி அறியாமலே குழந்தை பெற்றெடுக்க போகும் மனைவி.!

கேரள விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் ஷர்மாவும் இறந்துவிட்டார். அவரது மனைவி மேகா கர்ப்பமாக இருப்பதால்,இந்தசோக சித்தி இன்னும் தெரியப்படுத்தாமல் உள்ளது. கடந்த வெள்ளி கிழமை இரவு கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் ஷர்மாவும் இறந்துவிட்டார். ஆனால், இவரது இறப்பு செய்தி … Read more

#BREAKING: மூணாறு நிலச்சரிவு..உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு.!

கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களக்கு முன்பு தொடந்து கனமழை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் சிலர் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலச்சரிவிலிருந்து இன்று 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பின்னர் ராஜமலா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக இருந்த நிலையில் … Read more

தொடர் கனமழை எதிரொலி : பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.!

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளதை அடுத்து, அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரள மாநிலத்தில் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணை கனமழையின் காரணமாக நிரம்பி வழிகிறது. பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையமானது, பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு … Read more

தேவையான உதவிகளை செய்ய தயார் -கேரள முதல்வரிடம் பேசிய தமிழக முதல்வர்

கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என்று   தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்தது. இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக தமிழக … Read more

கேரளா நிலச்சரிவு..29ஆக உயர்ந்த உயிரிழப்பு..மீட்பு பணி 3வது நாளாக தீவிரம்.!

கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களக்கு முன்பு தொடந்து கனமழை காரணமாக அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணில் மூழ்கியது . இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 … Read more

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு.!

கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்வு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணில் மூழ்கியது . இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியகியுள்ளது. நேற்று வரை 20 க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்கப்பட்ட … Read more

கேரள மீட்பு பணிகளுக்கு உதவத் தயார் -அமைச்சர் உதயகுமார்

கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க  தமிழகம் தயார் நிலையில் உள்ளது என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை … Read more

முல்லை பெரியாறு அணை விவகாரம்.! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த கேரள அரசு.!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமானது 136 அடியை எட்டியதும் அதனை திறந்து வைகை அணைக்கு கொண்டு சேர்க்கவும், உபரி நீரை திறந்துவிடவும் கேரள அரசானது, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதே போல, இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையும் வினாடிக்கு 6500 கனஅடி நீர் வீதம் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டமானது உயர்ந்து கொண்டே வருகிறது. … Read more