ஓணம் பரிசாக கேரளாவில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் – பினராயி விஜயன்

கேரள அரசின் ஓணம் பரிசாக அம்மாநிலத்தில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் இருந்தும் வரும் சூழலில் இன்று கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓணம் பண்டிகையையொட்டி அரசின் நிவாரண கிட் அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று … Read more

தங்கக் கடத்தல் வழக்கு: பாஜக, பிரச்சனையின் நிலைப்பாட்டை விளக்கவேண்டும் – சிபிஎம் அறிக்கை.!

கேரளா தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷிடம் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.  ஸ்வப்னா  முதல்வர் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் என்பதால் கேரளா அரசு மீது பல புகார்களை பாஜக மற்றும் காங்கிரஸ் வைத்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ஜனம் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் அணில் நம்பியாருக்கும் ,  ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இந்த வழக்கில்  அணில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஸ்வப்னா சுரேஷ் உடன் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள தங்க நகைகளை கொண்டு கடன் பெற தேவசம்போர்டு முடிவு.?!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாம். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய முழுவதும் பல்வேறு பிரபல புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்களின் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு பிரபல கோவில்களில் அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோவில் நிர்வாகம் திணறி வருகிறதாம். இதனை கருத்தில் கொண்டு, கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஓர் முக்கிய தகவலை … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,476 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று 2,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 13 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல். 22,344 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து இன்று 1,351 பேர் குணமடைந்தனர். இதுவரை 41,694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரள தலைமைசெயலகத்தில் தீ விபத்து.! எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

கேரள அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல, திட்டமிட்ட நடத்தப்பட்டது என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இவை சிறிய தீ விபத்து என்பதால் அங்குள்ள தீயணைப்பு கருவிகளை கொண்டு தீ அணைக்கப்பட்டது. இருந்தாலும், சில ஆவணங்கள் ஏறிந்து போனதாக கூறப்படுகிறது. … Read more

காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பினராயி விஜயன் அரசு வெற்றி.!

கேரள சட்டப்பேரவையில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் தீர்மானம் தோல்வியடைந்தது. கொரோனா வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும் என … Read more

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்.!

இன்று நடைபெற்ற கேரளா சட்டப்பேரவையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து, … Read more

கேரள முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று கூடுகிறது சட்டப்பேரவை.!

இன்று ஒரு நாள் மட்டும் கூடும் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா … Read more

ஆகஸ்ட் 26 முதல் கேரளாவில் பிரபல கோவில் தரிசனத்திற்காக திறப்பு.!

ஆகஸ்ட் 26 முதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு கேரள பத்மநாபசுவாமி கோவில் பகதர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. கேரளாவில் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவர்  என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் முன்னதாக spst.in என்ற கோவிலுக்கு உரித்தான வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தரிசனத்திற்கு வருகையில் … Read more

கேரள நிலச்சரிவில் மக்கள் மனதை வென்ற குவி! கேரளாவில் நாய்க்கு வழங்கப்பட்ட அரசு பணி! காரணம் இதுதானா?

கேரளாவில் நாய்க்கு வழங்கப்பட்ட அரசு பணி. கேரள மாநிலம் பெட்டிமுடி மற்றும் ராஜா மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த 60- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானனின் 2 வயது குழந்தையை குவி என்ற நாய் கண்டுபிடித்தது. இந்த நாய் ஆற்றில் எதையோ மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்த மீட்பு படையினர் … Read more