“டிசம்பர் 2-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

வருகின்ற டிசம்பர் 2ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாவதில் தாமதமாகும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற 36 மணி நேரமாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என … Read more

எப்படியும் தங்களை பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் எடுத்த அதிரடி முடிவு!

தங்களை எப்படியும் பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஆணுக்கு பெண் மீதும் காதல் அல்லது அன்பு ஏற்படும் என்பது தான் இயற்கை விதி. ஆனால் தற்போதைய காலங்களில் பெண்கள் பெண்கள் மீதும், ஆண்கள் ஆண்கள் மீதும் என்று ஒரே பாலினத்தவர் காதலிக்கின்றனர், அதிக அளவில் நேசிக்கின்றனர். சில இடங்களில் பெண் தோழிகள் மிக அதிக அளவில் தங்கள் தோழிகளுடன் அன்பை … Read more

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்..!

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையினையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின் டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை … Read more

இன்று முதல் கேரளாவின் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி.!

இன்று முதல் கேரளாவின் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 12-ம் தேதி முதல் ரிசார்ட், ஹவுஸ் படகுகள் மற்றும் மலைப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம் கேரள தினமான இன்று முதல் கொச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி … Read more

கேரளாவின் 9 மாவட்டங்களில் நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 6,638 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் 5,789 பேருக்கு உள்ளூர்ப் பரவல் மூலம் நோய்த் தொற்று பரவியுள்ளது.ஆனால் மீதமுள்ள 700 பேருக்குத் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரம் தெரியவில்லை. மேலும் கொரோனாவால் நேற்று மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,457 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேராளாவின் 9 மாவட்டங்களில் ஊரடங்கு … Read more

தாத்தா பாட்டியிடம் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தாத்தா பாட்டியிடம் கேரளாவில் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய், மகள் இறந்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி. ஜீஷா என்பவர் தனது கணவர் மற்றும் மகளுடன் பிரிட்டனில் வேலை காரணமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர் நான்கு வயது பெண் குழந்தையை கேரளாவில் இருக்கக்கூடிய குழந்தையின் தாத்தா பாட்டியுடன் விட்டு விட்டு இவர்கள் பிரிட்டனில் வேலை செய்து வருகின்றனர். குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என சில தினங்களுக்கு … Read more

முக்கிய குற்றவாளி கைது..??சிக்குகிறதா முக்கிய தலைகள்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி ரபீன்ஸ் ஹமீதை தேசிய புலனாய்வு அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்திவரபட்ட ₹15கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இத்தங்க கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் அவருக்கு உதவியதாக சிவசங்கர் ஐஏஎஸ் என வரிசையாக சிக்கிய நிலையில் புலனாய்வு துறையும்அமலாக்கத்துறையும் விசாரணையை தீவிர படுத்தி வந்தது. சிவசங்கர் IASக்கு விசாரணைக்கு … Read more

ஒரே பிரசவத்தில் பிறந்த ஐவர்.! ஒரே நாளில் விமர்சையாக நடைபெற்ற மூவர் திருமணம்.!

கேராளாவின் திருவனந்தபுரத்தில் பிரேம் குமார் மற்றும் ரமாதேவி தம்பதியருக்கு கடந்த 1995ல் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. உத்ரா, உத்ரஜா, உத்தாரா, உத்தாமா மற்றும் உத்ரஜன் என்ற பெயருடைய ஐவரையும் பலருடைய உதவியாலும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வந்தனர். அதனையடுத்து கடந்த 2005ஆம் ஆண்டு பிரேம்குமார் மரணமடைந்ததை அடுத்து பல தடங்கல்களை தாண்டி குழந்தைகளை படிக்க வைத்தார். கேரளாவின் மிகவும் பிரபலமான இந்த ஐவரையும் பஞ்சரத்னங்கள் என்று அழைத்து வருவது … Read more

இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!

இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் அருகே உள்ள புளிகரை வயல்பகுதியில், ஏஞ்சல் என்பவருக்கு சொந்தமான வயல்பகுதியில், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வயலில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்த தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில்  இடத்திற்கு, பற்காம்புப்பிடிக்கும் பயிற்சி பெற்ற, வனத்துறை பணியாளர் செல்வராஜுடன் வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து, சின்னார் வனப்பகுதியில் விட்டனர்.

கேரளாவில் போலி மது அருந்தி 5 பேர் உயிரிழப்பு, 9 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வலயாரில் போலி மது அருந்தியதாகக் கூறி 5 பேர் உயிரிழந்துள்ளனர், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மதுபானம் தமிழ்நாட்டிலிருந்து வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. போலி மதுபானம் காரணமாக தான் உயிரிழந்தார்கள் என ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன, ஆனால் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் தெளிவாக தெரியவரும் என்று பாலக்காடு போலீஸ் கண்காணிப்பாளர் சிவா விக்ரம் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உள்ளனர். இறந்தவர்களில் ஒருவரான கே.சிவன் (37) … Read more