15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு

கர்நாடகாவில் உள்ள 15 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யயப்பட்ட நிலையில் 15 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது.இதற்கான வாக்குபதிவு தொடங்கியுள்ளது.மொத்தம் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது .மொத்தமுள்ள 4,185 வாக்குச் சாவடிகளில் 884 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் அங்கு  கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகின்ற 9-ஆம் தேதி எண்ணப்படுகின்றது.

கர்நாடகத்தில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்-சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி

கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது. இதனால்  எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.பின்  கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக  பதவி ஏற்றார்.மேலும் நாளை  காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை  நிரூபிக்க உள்ளார் எடியூரப்பா. இந்நிலையில்  கர்நாடகாவை சேர்ந்த … Read more

 அரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டேன்-கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்

கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற  ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது . அதில்,ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக  தெரிவிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.மேலும்  எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க … Read more

#Breaking: ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ்-மஜத  எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத  எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார்கள்.ஆனால்  கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பினார்.அதில், ராஜினாமா கடிதம் அளித்த 13 எம்.எல்.ஏக்களில் 8 பேரின் கடிதம் சட்டப்படி சரியானதாக இல்லை என்றும்  எம்எல்ஏக்கள் என்னை வந்து சந்திக்க நேரம் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்தார். ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ்-மஜத  எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் .அதாவது சபாநாயகரின் … Read more