பாஜக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி!பேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசின் மீது  நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில்  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் சட்டப்பேரவையில் குற்றச்சாட்டியுள்ளார். கடத்தப்பட்ட எம்.எல்.ஏக்களை மீட்டு தருமாறு சபாநாயகரிடம் அமைச்சர் சிவக்குமார் கோரிக்கை  விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் புகைப்படங்களை காட்டி டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். இதனால் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர் பாஜக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள். அமளியால் கர்நாடக பேரவையை அரை மணி நேரம் ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.நாகராஜ் மற்றும் சுதாகர் ஆகிய இரு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும்   மதச்சார்பற்ற ஜனதா தள  3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.