ஒரே குழியில் 12 சடலங்கள்! கர்நாடகாவில் நடைபெற்ற விபரீதம்!

12 உடல்களை ஒரே குழியில் அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால் 5,83,272 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 17,359 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பேர்  உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்களை ஒரே குழியில் அடக்கம் … Read more

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர பூஜை நடத்திய பாஜக எம்எல்ஏ.!

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர கர்நாடகா பாஜக எம்எல்ஏ யாகம் நடத்தியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஹோன்னலி தொகுதி பாஜக எம்எல்ஏ மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யார் கொரோனா வைரசுக்கு எதிராக யாகம் நடத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வைரஸில்லா உலகம் மீண்டும் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் பூஜை நடத்தி உள்ளனர். பூஜையில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்ததுடன், முகக்கவசம் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை – முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், 4-ம் கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா அதிகமுள்ள … Read more

73 லட்சத்திற்கு பொருள் உதவி செய்த இன்போசிஸ் அறக்கட்டளை !

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பாக N95 ரக முகமூடிகள் மற்றும் தனிநபர் பயன்டுத்தும் உபகரணங்களை ரூ 73 லட்சத்திற்கு வாங்கி கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிணா மாவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. வென்லாக் கோவிட் -19 மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதனை பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.  

7,8 மற்றும் 9 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து..!

உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.84பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் உயிரிழந்த இருவரில் ஒருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்களிடையே  கொரோனா அச்சம் காரணமாகவும் கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூட அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு விட்டார்,மேலும்  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை மட்டுமல்லாமல் திரையரங்குகள், … Read more

வாழ்க பாகிஸ்தான் என்று கோஷமிட்ட நபர்.! கைது செய்த போலீசார்.!

கர்நாடக மாநிலம், குந்தாபுரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று வழக்கம் போல பணிகள் தொடங்கியது. அப்போது பார்வையாளராக அங்கு வந்திருந்த ராகவேந்திரா கனிகி என்ற நபர் திடீரென பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டுள்ளார். பின்னரே இதனை கண்ட ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோஷமிட்ட அந்த நபரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அவர் பல நாட்களாக மனநலம் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.

உசேன் போல்டையே வாயடைக்க வைத்த மின்னல் வேக ஓட்டம்.!சிறப்பு பயிற்சி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

உசேன் போல்டை விட அதிவேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்த அவருக்கு பயிற்சி அளிக்கப்படும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார். கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா என்கிற போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர் அதனோடு சகதியோடு தடம் அமைக்கப்பட்ருக்கும். இப்போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்கிற இளைஞர் … Read more

மின்னல் மனிதன் உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சும் கர்நாடகா இளைஞர்.? 142.5 மீட்டரை 13.62 நொடிகளில் ஓடி சாதனை.!

கர்நாடகாவில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீநிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடி வெற்றி பெற்று, உசைன் போல்டின் சாதனையை முறியடித்துவிட்டார் என இணையதளத்தில் பரவி வருகிறது. ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய நட்சித்திர வீரர். இவர் ஓட்டபந்தியத்தில் உலக சாதனையை படைத்தது, அதனை மீண்டும் அவரே முறியடித்து சாதனை படைத்தார். பின்னர் தான் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டுக்கு உலக … Read more

நொடியில் மாறிய மாப்பிளை! தாலி கட்டியது யார்? நிகழ்ந்தது என்ன?

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கும்- பாக்யஸ்ரீ என்பவருக்கும் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் நேற்று 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தாலி கட்டுவதற்கு முன் பாக்யஸ்ரீயின் அம்மாவிடம் பேசிய மர்ம நபர் ஒருவர் பசவராஜ்க்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக கூறினார்.   இதை கேட்டதும் மாப்பிள்ளை வீட்டாருக்கும்- பெண் வீட்டாருக்கும் மண்டபத்தில் சண்டை காரசார பேச்சி நடைபெற்றது. தொடர்ந்து போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் பசவராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி அவர் … Read more

ஓய்வெடுக்க இடம் இல்லாமல் வீட்டின் கூரையின் மீது ஓய்வெடுக்கும் முதலை!

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து அவருகிறது. இந்த மழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தங்களது உடமைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஒரு வீட்டின் மீது முதலை ஒய்வு எதுக்கு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.