ஓகி புயல்: குமரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டர் தேவை…உதவ விரும்புவோர் தொடர்பு கொள்க…!

ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட  மக்களுடன் கைகோர்க்கிறது தினச்சுவடு தற்போது கிடைத்த தகவலின் படி சுசிந்திரம் பகுதியில் உள்ள குழந்தகரையில் இருக்கும் பல பள்ளிகளில் வெள்ளம் மற்றும் புயல் மழையால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுளனர்.   பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர்,உணவு அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள பகுதிகளில் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஜெனரட்டார் மிகத்தேவையான … Read more

கடல்சீற்றத்தாலும், தாமிரபரணி ஆற்று வெள்ளத்தாலும் 30 படகுகள் சேதம்

குமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி கடலும் தாமிரபரணி ஆறும் சந்திக்கும் இடத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. தாமிரபரணி ஆற்று வெள்ளமும், கடல் சீற்றமும் இணைந்த்தால் முட்டம் துறைமுகத்தின் கரையில் நிறுத்திவைக்க பட்டிருந்த 30 படகுகள் ஒன்றின் மீது ஒன்று மோதி சேதம் ஏற்பட்டது. இதனால் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதைமடைந்துள்ளன முட்டம் 30 படகுகள் சேதம்

பாபநாசத்தில் அதிகபட்ச மழை : தென்தமிழகத்தில் கடல் சீற்றம்

தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஓகி புயல் வலுவிழந்து அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளது. ஓகி புயல் காரணமாக அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் 45 செமீ மழை பெய்துள்ளது. மேலும் தென்தமிழக கடல் மற்றும் குமரி கடலில் கடல் சீற்றத்துடன் காணப்படும். சென்னையில் மழை விட்டுவிட்டு பெய்யும், தேனி, நீலகிரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓகி புயல் காரணமாக சுமார் 50 ஆயிரம் வாழைகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கலுன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகள் கூட மிகவும் பாதிக்கபட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டது. தற்போது இவை ஓகி புயல் காரணமாக அனைத்தும் சரிந்துள்ளது. சுமார் 50ஆயிரம் வாழைகள் புயலால் சேதமடைந்துள்ளன.

ஒகி புயல் காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை…!

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கன்னியாகுமரி ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக தற்போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும்,மேலும் அங்கு ஒகி புயல் காற்று காரணமாக சுமார் 60 தென்னை மரங்கள் கிழே விழுந்துவிட்டது எனவும் தகவல் தெரிவிக்கின்றன இதே போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கன்னியகுமாறி முழுவதும் பவர்கட்

ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் சாலை போக்குவரத்தும் பாதிக்கபட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் காட்சியளிக்கும் மழைநீர்

நெல்லை-கன்னியாகுமரி வழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியாளிக்கிறது. கன்னியாகுமரியில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல்லை கன்னியாகுமரி  தேசிய நெடுஞ்சாலையில் பணகுடி அருகே வெல்ல நீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடுகிறது. இதே மாதிரி வெள்ளநீர் அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால், நெடுஞ்சாலை போக்குவரத்து தடை படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 3000 பேர் தவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடல் சீற்றம், புயல் தெரியாமல் நேற்று  சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும் அனால், கரை திரும்ப முடியாமல் நடுகடலில் தவித்துவருகின்றனர். அவர்களை மீட்க கடற்படை சார்பில் இன்னும் முயற்சி எடுக்கப்படவில்லை என அந்தபகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

கன்னியாகுமரியில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே வர இயலாத சூழல் உருவாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபாடுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவைகளில் பெரிதும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொல்லம் முதல்  சென்னை எழும்பூர்  வரை செல்லும் அனத்தபுரி ரயில் திருவனத்தபுரம் வரை இயக்கப்படும் என அறிவிப்பு.

குமரி மாவட்ட 4 மீனவர்கள் மீட்பு

கன்னியகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக சுமார் 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது, இதனால் குமாறி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மண்டைகாடு, புதூர் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிக்க சென்றனர். அப்போது படகு கவிழ்ந்து உயிருக்கு போராடிய நிலையில் முட்டம் பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.