புதுச்சேரியில் மீனவர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில்  கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக்கோரி கடலூர் சிங்காரவேலன் சிலை அருகே அனைத்து மீனவ பஞ்சாயத்து சார்பாக ஆர்ப்பாட்டம் புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர்.

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையின் கப்பல் ஈடுபட்டுள்ளது!

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையின் கப்பல் ஈடுபட்டுள்ளது பொன்.ராதாகிருஷ்ணன்.

ஒகி புயலால் இரண்டு மீனவர்கள் உடல்கள் கொச்சி அருகே மீட்பு!

ஒகி புயலால் திசை மாறிச் சென்று காணாமல் போன 2 மீனவர்களின் உடல்கள் கொச்சி, விழிஞ்சம் துறைமுகம் அருகே மீட்பு

வெளிநாடுகளிலும் மீனவர்களை தேட மத்திய அரசு முயற்சி !

மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது . வெளிநாடுகளிலும் மீனவர்களை தேட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்…

மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது !

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!வானிலை மையம் தகவல் …

வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரியில் போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது வழக்கு பதிவு !

ஒகி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி குழித்துறையில் நடைபெற்ற ரயில்மறியலில் ஈடுபட்ட 2,000 பேர் மீது மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு..

மீட்புப்பணியின்போது மீனவர்கள் சடலங்கள் ஏதும் இல்லை பாதுகாப்புத்துறை பகீர்…

நடுக்கடலில் அழுகிய நிலையில் மிதந்த சடலங்களை படம்பிடித்த மீனவர்கள்… மீட்புப்பணியின்போது சடலங்கள் ஏதும் கிடைக்கவில்லை என பாதுகாப்புத்துறை தகவல்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் போராட்டம் !

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி பல்வேறு பகுதியில் மீனவர்கள் போராட்டம். திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் போராட்டம்.

ஒகி புயலால் காணமல் மீனவர்களை மீட்கக்கோரி கன்னியாகுமரியில் போராட்டம்!

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக் கோரி கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் கடலில் இறங்கி 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம்