கனமழையால் நாளை 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல்  தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்  கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்  கன்னியாகுமரி ஆகிய 4 … Read more

4 மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

Heavy Rain in Tamilnadu

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இன்று  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, … Read more

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Michaung Cyclon - Heavy rain

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Schools - holiday

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளான இன்று, கன்னியாகுமரி தினம் கொண்டாட படுகிறது. இன்று 67-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளை முன்னிட்டு  இன்று  மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாமக்கல் தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று (நவம்பர் 1ம் தேதி) விடுதலை நாள் கொண்டாட்டம் மற்றும் நாளை … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி.! தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது.!

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது.  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் … Read more

கன்னியாகுமரியில் நாளை நடை பயணத்தை தொடங்க உள்ளார் ராகுல்காந்தி!

கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்குலைவு, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி, மத பிரிவினைவாதம் போன்றவற்றைக் கண்டித்தும், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார். தினமும் 20 … Read more

#BREAKING: அதிர்ச்சி! கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி?

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு போன்று உடலில் வீக்கம் இருந்ததால் 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனி வார்டில் சிகிச்சை பெறும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரிகள் புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் … Read more

#JustNow: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்!

நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் இன்று மத்திய சாப்பாடு, பருப்புக்குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறைக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் … Read more

சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! விரைவில் அப்டேட்.?

நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 41-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமாரியில், பூஜையுடன் தொடங்கப்பட்டு அங்கு செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்  தற்போது கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட … Read more

சற்று முன்…மதமாற்ற புகார் – ஆசிரியர் பணியிடை நீக்கம்!

கன்னியாக்குமரி மாவட்டத்தில் கண்னாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம்,பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து,சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி,ஆசிரியை பியட்றிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில்,மதமாற்ற புகாரில் சிக்கிய தையல் ஆசிரியயை பியட்றிஸ் தங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். … Read more