சூறாவளி பிரச்சாரத்தில் ஓர் நடைபயணம்… தூத்துக்குடி மார்க்கெட்டில் முதல்வர்.!

CM MK Stalin campagain in Thoothukudi Market

Election2024 : நடைப்பயிற்சி முடித்துக்கொண்டு தூத்துக்குடி காய்கறி சந்தையில் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் … Read more

தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கனிமொழி கருத்து

Kanimozhi: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விதிமீறல்கள் பல இருப்பதால் தான் அரசு மற்றும் உயர்நீதிமன்றம் உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில … Read more

பிரதமர் உரை… அதுதான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்.! கனிமொழி எம்பி பேட்டி.!

PM Modi - DMK MP Kanimozhi

DMK MP Kanimozhi – பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்து இருந்தார். நேற்று திருப்பூர் பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டம், மதுரையில் சிறு குறு தொழில் முனைவோர்களின் கருத்தரங்கம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் என நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி, நெல்லை வந்திருந்தார். இதில் , தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க … Read more

சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது.! – கனிமொழி எம்.பி

2024க்கான பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை  தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டது முதற்கட்டமாக தூத்துக்குடி சென்று கருத்துக்களை இந்த குழு சேகரித்தது. இரண்டாம் நாளாக நேற்றும் கன்னியாகுமரியில் இந்த குழுச்சென்று அங்குள்ள பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டு அதை மனுக்களாக பெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று மதுரையில் கனிமொழி … Read more

கன்னியாகுமரியில் திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!

2024 கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை  தயாரிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு முதற்கட்டமாக  நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி சென்றனர். அக்கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றனர். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா … Read more

தேர்தல் அறிக்கை! மக்களிடம் கருத்து கேட்கும் திமுக… பரிந்துரைகளை எப்படி அனுப்புவது?

DMK Manifesto

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயார் செய்வது உள்ளிட்டவைகள் தொடர்பான தேர்தல் பணிக்குழு அமைத்து அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் குறிப்பாக கனிமொழி எம்பி தலைமையில் … Read more

விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! – கனிமொழி பேட்டி.

Kanimozhi MP - TVK Vijay

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சி பெயரையும் அது குறித்த அறிக்கையும் நடிகர் விஜய் வெளியிட்டார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியை விஜய் தரப்பினர் நேற்று … Read more

அம்மாவின் வாசனை! வெளிவராத பவதாரணியின் பாடலை வெளியீட்டு இரங்கல் தெரிவித்த எம்பி கனிமொழி!

kanimozhi bhavatharini

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக வடிவேலு, சிம்பு,  இயக்குனர் பாரதி ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கவின், கமல்ஹாசன், உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.  அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் … Read more

எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை… கனிமொழி எம்பி பேட்டி!

kanimozhi

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, தேர்த பணிக்குழு அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பணிகள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், சமீபத்தில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை … Read more

ஒரு கோவிலை முழுவதுமாக கட்டி முடிக்காமல் திறக்கலாமா? கனிமொழி கேள்வி

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இன்று காலை மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பியும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் இளைஞரணி மாநாட்டில் கனிமொழி பேசுகையில், “பேரறிஞர் அண்ணா … Read more