காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி… ஓர் பார்வை!

Kanchipuram Lok Sabha Constituency

Kancheepuram : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 6-ஆவது இடத்தில் இருப்பது காஞ்சிபுரம் மக்களவை தொகுதி தான். கடந்த 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதே ஆண்டில் ஒருமுறை மட்டுமே மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், பின்னர் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பு பிறகு மீண்டும் 2009-ல் இருந்து காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் தேர்தல்  நடைபெற்று வருகிறது. இதன்மூலம் காஞ்சிபுரம் தொகுதியில் நான்கு முறை … Read more

#BREAKING: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா.!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு  கொரோனா பாதிப்பு என தகவல். கோவை ஆட்சியரை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,51,820பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் … Read more

அதிர்ச்சி தகவல்.! ஊரடங்கு முடியும் வரையில் பால் விற்பனை நிறுத்தமா?!

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் போலீசார் சோதனை அதிகமாகஉள்ளதால் ஊரடங்கு முடியும் காலம் வரையில் கடைகளுக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் தெரிவித்துள்ளான். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆதலால், அந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் தற்போது முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் … Read more

காஞ்சிபுரத்தில் மது வாங்க 3 கி.மீ தூரத்திற்கு காத்திருந்த கூட்டம் !

காஞ்சிபுரத்தில் மதுபானம் வாங்க 3 கி.மீ தூரத்திற்கு காத்திருந்த கூட்டம்.  தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளனர்.  தமிழக அரசு வரும் 7ம் தேதியில் இருந்து மதுக்கடைகள் திறக்கப்படும் என்றனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டது.  மதுபானங்களை வாங்க மக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியுடனும் … Read more

ரூ. 4000 கோடி சியட் டயர் தொழிற்சாலை ! தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி

ரூ. 4000 கோடி மதிப்பீட்டில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சியட் டயர் தொழிற்சாலையை தமிழகத்தில் ரூ.4,000 கோடி மதிப்பில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சியட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே மருதாமங்கலத்தில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.இந்த தொழிற்சாலை மூலமாக நேரடியாக 1000 பேருக்கும்,மறைமுகமாக 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு  வழங்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.  இதன்  பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,வாகன … Read more

குடிநீர் பள்ளத்தில் விழுந்த இரண்டரை வயது சிறுமி.. காப்பாற்ற ஆளில்லாதால் உயிரிழந்தது..!

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ளது, பனையூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள், மூன்றிலிருந்து ஐந்து அடி வரை பள்ளம் தோண்டி அதில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். இந்நிலையில் பகுதியில் நேற்று பெய்த மழையால் அந்தப் பள்ளத்தில் நீர் நிறைந்திருந்தது. அருகாமையில் விளையாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை சஞ்சீவீனா, … Read more

காஞ்சிபுரம் அருகே கண்டறியப்பட்ட வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன!

கடந்த ஞாயிற்று கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில், ராணுவ பயிற்சிகாக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சில செயல் இழந்தும் செயல் இழக்காமலும் இருந்துள்ளது. இதனை அங்குள்ள இளைஞர்கள் எடுக்கையில் அவை வெடித்து சிதறின. இதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நேற்று இந்த இடத்தில் 10 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன. அதில் சில செயல் இழந்தும், சில செயல் இழக்காமலும் கிடைத்துள்ள்ளன. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து … Read more

காஞ்சிபுரம் பகுதியில் 10 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா பகுதிக்கு உட்பட்ட அனுமந்தபுரம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த குண்டுகள் பாதி வெடித்தும் பாதி வெடிக்காமலும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது குறித்து விசாரிக்கையில், குறிப்பிட்ட அனுமந்தபுரம் ஏரிப்பகுதி பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியாகும் இங்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோல பயிற்சி நடைபெறும். அந்த பயிற்சி நடைபெற்று முடிந்த பின்னர், இது … Read more

காஞ்சிபுரம் அருகே நேற்று வெடித்த அதே இடத்தில் மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியுள்ளது

தமிழகத்தில் இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக,  உளவுத்துறை ரகசிய தகவல் கொடுத்திருந்தது. இது குறித்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகே திருப்போரூர் என்ற இடத்தில் ஒரு மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இதனால், போலீசார் தீவிரமாக அந்த இடத்தில் விசாரித்து சோதனையிட்டு வருகின்றனர். தற்போது, மேலும் ஒரு வெடிபொருள் காஞ்சிபுரம் திருப்போரூரில் கிடைத்துள்ளதாக … Read more

தனியார் தண்ணீர் லாரிகள் இன்று முதல் திடீர் வேலைநிறுத்தம்!

தனியார் தண்ணீர் லாரிகள் பல தண்ணீர் எடுக்க உரிமம் இல்லாத காரணத்தால் அவ்வப்போது சிறைபிடிக்க படுவதால், தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் அணைத்து தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 4500 லாரிகள் பங்கேற்றுள்ளன. லாரிகள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் தண்ணீருக்கு பெரும்தட்டப்படு ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ‘ இன்னும் ஓரிரு நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 லாரிகளுக்கு லைசன்ஸ் … Read more