மக்களவை தேர்தல் – கமல்ஹாசன் ஆலோசனை!

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக கமல்ஹாசன் கருத்து கேட்பு. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா நகரில் நடைபெறும் ஆலோசனையில் மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக கமல்ஹாசன் கருத்து கேட்டு வருகிறார்.

இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் … Read more

தள்ளுமுள்ளாள் ஏற்பட்ட மோதல்.! “பிக் பாஸ்” வீட்டுக்குள் கலவரம்.! வைரலாகும் புதிய வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்குள் கடுமையான தள்ளுமுள்ளு நிகழ்கிறது. நிவாசினி மற்றும் ஷெரினாவை தள்ளிவிட்டதற்காக தனலட்சுமியை பார்த்து ‘நீயும் ஒரு பொண்ணுதான” என்று அசீம் கோபத்துடன் கேட்கிறார். இந்த செய்தியை முழுவதுமாக படிக்க கீழே உள்ள  லிங்கை கிளிக் செய்க  – … Read more

ஜி.பி.முத்து முதல் தனலட்சுமி வரையில்… பிக் பாஸ் பிரபலங்களில் இமாலய சம்பள விவரம்.! கமல் லிஸ்ட் தனி.!

பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில் விறு விறுப்பாக முதல் வாரத்தை கடந்துள்ளது. இந்த 6-வது சீசன் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அஸீம், தனலட்சுமி, அசல் கோளாறு, ஷிவின், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, மணிகண்டன், செரினா,ராம் ராமசாமி,ரச்சிதா, ஜனனி, சாந்தி, எடிகே, விக்ரமன், அமுத வாணன், விஜே கதிரவன், மகேஸ்வரி,குயின்சி உள்ளிட்ட இருப்பது பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். நேற்று முன்தினம் வைல்ட் கார்டு எண்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். … Read more

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் அண்ணாமலை – மநீம கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆடுமேய்க்கும் தொழிலுக்குத்தான் போக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கண்டனம். ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் என மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பாஜக கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று … Read more

பொன்னியின் செல்வனை நுணுக்கமாக கவனித்தால் காரணம் தெரியும்.! இயக்குனர் மோகன்.ஜி விளக்கம்.!

ஹிந்துஸ்தான் என்ற வார்த்தை 2000 வருடத்திற்கு முன்பு இருந்தே இருக்கிறது. இந்து எனும் வார்த்தை ராஜ ராஜ சோழனுக்கு பொருந்தும். – என திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கருத்து தெரிவித்துள்ளார்.  திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை கூட இந்து மதத்தை சார்ந்தவர் என மாறிவிட்டார்கள்.’ என பேசியிருந்தார். ராஜராஜ சோழன் சைவ மதத்தை சார்ந்தவர் , சோழர் காலத்தில் இந்து மதம் ஒன்று … Read more

களத்தில் இறங்கிய இந்தியன்.! வெறித்தனமான தோற்றத்தில் உலகநாயகன்.! வெளியான வைரல் புகைப்படங்கள்….

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட … Read more

100 வருட சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த நம்பர் 1 திரைப்படம் “விக்ரம்” தான் – திருப்பூர் சுப்பிரமணியம்.!

கடந்த ஜூன் 3-ஆம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் போஸ்டர் வெளியீட்டு நன்றியை தெரிவித்திருந்தார். இதனையடுத்து, விக்ரம் படத்தின் 100வது … Read more

அடி தூள்….! மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி.? வெளியான சூப்பர் தகவல்.!

மேயதா மான், குளு குளு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விக்ரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக நடிகரும் நடன இயக்குனருமான ராகவலாரன்ஸை வைத்து … Read more

ஆண்டவர் தரிசனம் 50 முறை…”விக்ரம்:” படம் பார்த்து உலக சாதனை படைத்த கமல் ரசிகர்..!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம்  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதையும் படியுங்களேன்- பத்தல…பத்தல… சம்பளத்தை … Read more