உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்பு!

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை பதவி வகிப்பார். உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதிவியேற்று கொண்டார். இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 28-ஆக உயர்ந்துள்ளது. தீபங்கர் தத்தாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.

தமிழக நீதிமன்ற கட்டமைப்பு சிறப்பாக உள்ளது – உச்சநீதிமன்ற நீதிபதி

தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து. தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. ஏழையும், கல்வியறிவு அற்றவரும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினால் நீதிமன்ற கட்டமைப்பில் தவறு உள்ளது என்பதே அர்த்தம். பெண்ணுக்கு பெண்தான் எதிரி,சமுதாய கட்டமைப்பு பற்றி … Read more

#Breaking:பரபரப்பு…நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நீதிபதியை கத்தியால் கொல்ல முயற்சி!

சேலம்: 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி. சேலத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.இதனால்,நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களிடையே பரபரப்பு நிலவுகிறது. சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்கள் இன்று வழக்கம்போல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில்,நீதிபதியை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி … Read more

தொலைக்காட்சி விவாதங்கள் தான் அதிக மாசு ஏற்படுத்துகிறது – உச்சநீதிமன்ற நீதிபதி!

தொலைக்காட்சி விவாதங்கள் தான் அதிக மாசு ஏற்படுத்துகிறது என  உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு தற்போது அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற கூடிய புகையினாலும் தான் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அவர்கள், தீபாவளி பட்டாசு வெடித்ததற்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் மீது பழி … Read more

லக்கிம்பூர் கெரி வன்முறை : விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் நியமனம்!

லக்கிம்பூர் கெரி வன்முறை விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின்  அவர்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள், ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச … Read more

விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது – நீதிபதி என். கிருபாகரன்!

விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது என பிரிவு உபசார விழாவில் ஓய்வுபெறும் நீதிபதி என். கிருபாகரன் கூறியுள்ளார். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தவர் தான் நீதிபதி என்.கிருபாகரன். இவர் தனது சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மத்திய மற்றும் மாநில … Read more

மாவட்ட முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் மரணம் – இருவர் கைது….!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தன்பாக் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தன்பாத் மாவட்டத்தின் முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் காலை நேரம் வழக்கம் போல தனது வீட்டின் அருகே உள்ள சாலை ஓரமாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது அவர் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த நீதிபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் … Read more

மாவட்ட நீதிபதி மரணம் – அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் அரசுக்கு உத்தரவு…!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் அவர்கள் சாலையோரம் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த நீதிபதியின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை … Read more

கொரோனாவால் உயிரிழந்த பெண் நீதிபதி – 25 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு!

வனிதா எனும் பெண் நீதிபதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் இவரது மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய நீதிபதி வனிதா திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், அண்மையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதாலத் நீதிமன்றத்தின் நிரந்தர தலைவராக மே 5ஆம் தேதி பொறுப்பேற்றுள்ளார். அன்றைய தினமே அவருக்கு உடல்நிலை … Read more

ரம்ஜான் தினத்தன்று கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதித்த காங்கோ அரசு!

ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் ரம்ஜான் தினத்தன்று கலவரத்தில் ஈடுபட்டு 29 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து தலைநகரான கின்சாஷாவில் உள்ள மிகப் பெரிய மைதானத்தில் இந்த ரம்ஜான் பண்டிகையைக்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்துவது யார் என்பது தொடர்பாக இரு முஸ்லிம் பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, பெரும் … Read more