ஜெயம் ரவி நடிக்கும் ஸ்பை திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள டாப்ஸி!

கோமாளி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் முழு கவனத்துடன் வேலை செய்து வருகிறார். இந்த படத்தை ரோமியோ ஜூலியட் போகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து நடிகர் ஜெயம்ரவி தனது 26வது படத்தில் ராணுவ வீரராக நடிக்க உள்ளார். இந்த படத்தை மனிதன், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களை இயக்கிய அகமது இயக்க உள்ளார். இந்த படம் ஒரு ஸ்பை திரில்லர் … Read more

தனி ஒருவன் 2 பற்றிய மாஸ் அப்டேட்! கதை ஓகே! தலைப்பு கிடைக்குமா?

ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா இருவருக்கும் பெரிய வெற்றியை பெற்று தந்த திரைப்படம் தனி ஒருவன். இந்த திரைப்படம் மூலம் ஜெயம்ரவிக்கு தமிழ் திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல ரீமேக் இயக்குனர் என பெயரெடுத்து இருந்த ஜெயம் ராஜா இப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறியப்பட்டார். அரவிந்த் சாமிக்கும் பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. தனி ஒருவன் 2 திரைப்படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகும் என கூறப்பட்டு வந்தது. ஜெயம் … Read more

கோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்!

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் கோமாளி. இப்படத்தை அடுத்து ஜெயம்ரவி எந்த படத்தில் நடிக்கிரார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக தனது 25-ஆவது படத்தினை போகன் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து தனது 26ஆவது படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக … Read more

யார் யாருக்கெல்லாம் SIIMA விருதுகள்?! அந்த பெரிய லிஸ்ட் இதோ!

தென்னிந்திய திரைப்படங்களுக்கு வருடாவருடம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட கமிட்டியான SIIMAவானது விருது வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக (மக்களின் தேர்வு ) நடிகர் தனுஷ் ( வடசென்னை), சிறந்த நடிகர் ( தேர்வர்களின் தேர்வு ) ஜெயம் ரவி ( அடங்க மறு), சிறந்த படம் – பரியேறும் பெருமாள் சிறந்த நடிகை –   ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா) சிறந்த நடிகை 2019 – திரிஷா சிறந்த … Read more

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கோமாளி படத்தின் மிரட்டலான வசூல் நிலவரம்!

ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படம் கோமாளி. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இப்படத்தில் காஜல், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதால் படத்தின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில் 1.36 கோடி வசூல் செய்துள்ளது.அதே போல தமிழ்நாடு முழுவதும் 2 நாளில்  9 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இங்கு யார் கோமாளி?! ஜெயம் ரவியின் கோமாளி பட விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்து உள்ளார்.   இந்த படத்தின் கதை ட்ரெய்லரில் காண்பித்தது போல 16 வருடம் கோமாவில் இருந்து மீண்டு … Read more

90’s நீங்கா நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்திய கோமாளி படக்குழு! என்னதான் செய்தது?!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில காட்சிகளால் திரையுலகில் சின்ன அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இப்படம் முழுவதும் 90களில் நாம் பெற்ற சின்ன சின்ன அனுபவங்களை தற்போது ஞாபகப்படுத்தும் வண்ணம் தயாராகி உள்ளது. தற்போது உள்ள நவீன உலகில் என்னென்ன சந்தோசங்களை இழந்தோம் என … Read more

இந்த ஒரு கெட்டப்பிற்க்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரா ஜெயம் ரவி! [படக்குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து அதற்க்கு கடுமையாக உழைப்பவர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சுமார் 10 கெட்டப்களில் வருகிறார். இதில் 4 கெட்டப் படத்தில் முக்கியமாக இருக்கும் மற்றவை பாட்டு போன்ற மற்ற இடங்களில் வரும் என படக்குழு கூறியது. இதனை தொடர்ந்து, கோமாளி படத்தில், பள்ளி பருவ காலகட்டத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை சுமார் … Read more

ரஜினியே எங்கள் படக்குழுவை பாராட்டத்தான் செய்தார்! ஜெயம் ரவி ஓபன் டாக்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி பட ட்ரெய்லர் தான் இரண்டு நாளாக தமிழ் திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. காரணம், படத்தின் ட்ரெய்லரில் உள்ள சிந்திக்க வைக்கும் காமெடி காட்சிகள், அடுத்ததாக ரஜினி அரசியல் குறித்து காமெடியாக உருவாக்கபட்ட காட்சிகள் தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம் . ரஜினி அரசியல் குறித்து 16 ஆண்டுகளாக பேசி வருவது போல காமெடியாக காட்சிப்படுத்தப்பட்ட அந்த காட்சி ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதனை … Read more

ரஜினிக்கு ஆதரவாக தயாரிப்பாளரிடம் கடிந்து கொண்ட உலகநாயகன்! விளக்கம் தந்த படக்குழு!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி.  இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற பாக்குறீங்க இது 1996 என கூறி கலாய்த்து இருப்பார். இந்த காட்சி சினிமா வட்டாரத்தில் விவாத … Read more