சட்ட ஒழுங்கை காப்பாற்ற தெம்பில்லாத ஸ்டாலின் அரசு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

தமிழகத்தில், வெடிகுண்டு கலாச்சாரம், கத்தி கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், சூதாட்ட கலாச்சாரம் என வளர்ந்து வருகிறது. இதனை தடுக்க ஆளும் அரசுக்கு தெம்பில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.  தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு கோவையில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக அங்கு பலத்த பாதுகாப்பு போடபப்ட்டது.கோவையை தொடர்ந்து, மதுரை, கன்னியாகுமரி, என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு, … Read more

கோடநாடு வழக்கு மூலம் அதிமுகவை பயமுறுத்த முடியாது – ஜெயக்குமார் பேட்டி

அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார்,  அரசியலில் பண்பாடு வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அரசியல் பண்பாடு கருதி நாங்கள் அவ்வாறு பேசமாட்டோம். பதவி பெறுவதற்காக அதிமுகவை பற்றி அவர் விமர்சிக்கிறார். முதல்வர் ஸ்டாலினை திருப்தி படுத்தி பதவி பெற நினைக்கிறார். … Read more

வஞ்சகன் தினகரன் உடன் சேர்ந்து ஓபிஎஸ் பாழாய் போய்விட்டார்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்.!

ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,’ ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என பாடிவிட்டு வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து பாழாய் போய்விட்டார்.’ என்று கூறினார் சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியர் அவர்களின் 105-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னை கிண்டியில்அமைந்துள்ள ராமசாமி படையாட்சியார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் ஓபிஎஸ் பற்றி கேட்கையில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். … Read more

#BREAKING: ஓபிஎஸ்ஸை அனுமதிக்க கூடாது என ஜெயக்குமார் மனு!

ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைவதை தடுக்க பாதுகாப்பு தேவை. அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமச்சர் சிவி சண்முகம் ஏற்கனவே போலீசில் … Read more

#BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கில் செப்.13ல் உத்தரவு!

நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13-ல் உத்தரவு. தன் மீதான நிலமோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்டம்பர் 13-ல் உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மருமகனின் சகோதரரின் சொத்துக்களை அபகரித்ததாக ஜெயக்குமார் மீதான வழக்கில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதனிடையே, சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது … Read more

லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா? என ஜெயக்குமார் ட்வீட். லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க லுங்கி அணிந்து வந்தவரை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என தகவல். லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? என்றும் சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக … Read more

ஒரு நாளைக்கு ரூ.2.40 கோடி ஊழல்.. 5.5 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது – ஜெயக்குமார்

நாள்தோறும் ஆவின் பாலில் ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆவினில் தினந்தோறும் பாலில் 2.40 கோடி மதிப்புள்ள ஊழல் நடைபெற்று வருவதாக புகார் கூறியுள்ளார்.  ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாகிறது. இதில் ஒரு நாளுக்கு 5.50 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது என பால்வள துறை அமைச்சர் நாசரை , … Read more

#BREAKING: ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல்.. கட்சி தலைவர் ஓபிஎஸ் தான் – செல்வராஜ்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயல் ஒரு கேவலமான செயல் என ஆணைய கூட்டத்துக்கு பிறகு கோவை செல்வராஜ் பேட்டி. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் கலந்து கொண்டார். இபிஎஸ் தரப்பில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் … Read more

ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, ஓபிஎஸ் ஆட்களை நியமிக்கிறார் – ஜெயக்குமார்

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அமைப்பு ரீதியிலான 9 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தலைமையில் நடைபெறும் முதல் … Read more

ஐ.நா சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி – ஜெயக்குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு என ஜெயக்குமார் விமர்சனம். அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசமாகிறது. அதிமுக தலைமை அலுவலகம் சாவியை எடப்பாடி பழனிசாமி ஒப்படைக்க உயர்நீதிமன்றம் போட்ட  உத்தரவால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கில் ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் … Read more