இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பாகிஸ்தானியர். உடனடியாக கண்டறிந்து கைதுசெய்த எல்லை பாதுகாப்பு படையினர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு வழக்கமாக இந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அத்துமீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு பாகிஸ்தான்  நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டுள்ளனர். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதால் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு … Read more

இந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்… டிஜிபி தில்பாக் சிங்..!

ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை 2019-ஐ விட சற்றே அதிகமாக உள்ளது. இதில், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், அவர்களில் 70% பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர் எனதெரிவித்தார். 2018-19 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 44 அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர், அதன் எண்ணிக்கை தற்போது 38 ஆக உள்ளது. பாகிஸ்தானின் … Read more

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…!

 ஜம்மு-காஷ்மீரில் இன்று  ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கவியல் தேசிய மையத்தின்படி, மாலை  06:56 மணிக்கு ஏற்பட்டது. இந்த  நிலநடுக்கம் காரணமாக எந்தவொரு உயிர் இழப்பு அல்லது பொருட் சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்தாண்டு ஜம்மு-காஷ்மீரில் 200 தீவிரவாதிகள் சுட்டு கொலை.!

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் இந்தாண்டு 200 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளுடன் இணைந்து ஸ்ரீநகர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில், சயிஃபுல்லா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் சுட்டு கொல்லப்பட்டதாக கூறிய டிஜிபி தில்பக் சிங், இந்த ஆண்டில் அக்டோபர் … Read more

மெகபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டதை அறிந்து  நான் மகிழ்ச்சியடைகிறேன்- மு.க.ஸ்டாலின்

மெகபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதை அறிந்து  நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அங்குள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தியும் … Read more

அனந்த்நாக் மாவட்டத்தில் என்கவுண்டர் தொடங்கியது..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள  சிர்ஹாமா பகுதியில் என்கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளது எனவும் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர் என ஜம்முகாஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவந்திபோராவின் மகாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன்  நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Encounter has started at #Sirhama area of #Anantnag. Police and security forces are on the job. Further details shall follow. … Read more

ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை..!

இடைநீக்கம் செய்யப்பட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் (டிஎஸ்பி) டேவிந்தர் சிங் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி நவீத் பாபு ஆகியோரின் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் இன்று  சோதனைகளை நடத்தியது. பரமுல்லா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறைந்தது நான்கு வீடுகள் மற்றும் ஒரு அரசாங்க குடியிருப்பில் பல மணி நேரம் சோதனைகளை  மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல்ஹல்லன் பட்டனில் உள்ள குலாம் ரசூல் வாசா, கனிஸ்போரா … Read more

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை..!

ஜம்மு-காஷ்மீரின் புத்கம் மாவட்டத்தில் உள்ள காவுசா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அங்கு காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் இருந்து 10,000 வீரர்களை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு .!

கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால், பல பகுதிகளில் இருந்து காஷ்மீருக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந் நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு … Read more

ஜம்முவில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை.. மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.!

ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் நடந்த மோதலில் மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். நேற்று முதல் பரமுல்லா மாவட்டத்தில் மோதல் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனால், மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடன் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவையை  மீட்கப்பட்டன.  மேலும், தேடுதல்  … Read more