சத்குருவின் விருப்பப் பாடலை பாடிய ஜெர்மன் பாடகி!

Sadhguru

Sadhguru: “பக்தியெனும் மொழியில் பாடுவதை கேட்க விருந்தாக இருந்தது” என சத்குரு பாராட்டியுள்ளார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார். சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான … Read more

ஈஷாவில் சப்தரிஷி ஆரத்தி! காசியைச் சேர்ந்த 7 உபாசகர்கள் நடத்தினர்.!

ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று (டிச. 22) சிறப்பாக நடைபெற்றது. இந்த சப்தரிஷி ஆரத்தி, சிவ பெருமான் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறை. இது வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக , காசி … Read more

ஈஷா மையத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

கோவை ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும், எனவே விலக்கு பெற உரிமை உள்ளது என்றும் மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுர மீட்டரில் கல்வி நிலையம் உள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளது எனவும் நீதிமன்றம் … Read more

Save Soil: ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் !

உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் மண் வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (டிசம்பர் 5) நடைபெற்றன. வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரகுநாதன் தலைமை தாங்கினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மண் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயிகளின் விளைச்சலும் குறைந்து கொண்டே வருகிறது. இழந்த மண் வளத்தை … Read more

நீங்கள் சிறப்பாக வணிகம் செய்ய வேண்டுமா? ‘முக்தி’ நிலையில் இருங்கள்! ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை

“நீங்கள் உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த விரும்பினால், நீங்கள் ‘முக்தி’ நிலையில் இருக்க வேண்டும். அனைத்து செயல்களிலும் முழுமையான ஈடுப்பாட்டோடும், அதேசமயம் அச்செயல்களில் சிக்கி போகாமலும் செயல் செய்ய வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை வழங்கினார். ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வர்த்தக தலைவர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (நவ.24) தொடங்கியது. முதல் நாளான நேற்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய … Read more

ஈஷாவின் வழிகாட்டுதலில் 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு விற்ற விவசாயிகள்!

அருள்மிகு சோமேஸ்வரர் FPO புது சாதனை ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் அருள்மிகு சோமேஸ்வரர் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இடைத்தரகர்கள் இன்றி 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு நேரடியாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநரும், விவசாயியுமான திரு. இரஞ்சித் அவர்கள் கூறுகையில், “ஜாதிக்காய் விவசாயிகளான நாங்கள் இதுவரை 4 அல்லது 5 இடைத்தரகர்களுக்கு எங்களுடைய விளைப்பொருட்களை விற்று வந்தோம். அவர்கள் அனைவரும் எவ்வித பேரமும் பேசாமல் ஒரே விலை … Read more

ஈஷா சார்பில் தமிழக சுகாதார துறைக்கு 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று (ஜூலை 21) வழங்கப்பட்டது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முக கவசங்களை ஈஷா தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அவர் அவற்றை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் பிரித்து வழங்கினார். இது தொடர்பாக அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “4 லட்சம் … Read more

27 நாடுகள்,27,200 கி.மீ பயணம்,593 நிகழ்ச்சிகள் – ஜூன் 21-ம் தேதி தமிழகத்திற்கு திரும்பும் சத்குரு!

27 நாடுகள்,27,200 கி.மீ பயணம்,593 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார். மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு,ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார்.இதுவரை சுமார் 27,200 கி.மீ பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் … Read more

‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!

‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை கமாண்டிங் ஆஃபிசர் அசோக் ராய் தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் (ஜூன் 5) நடைபெற்றது.ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு … Read more

மண் வளப் பாதுகாப்பு குறித்து 420 கி.மீ சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி!

பெங்களூருவில் இருந்து கோவை வருகை: மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 27 தன்னார்வலர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 420 கி.மீ சைக்கிளில் பயணித்து இன்று (ஏப்ரல் 15) கோவை வந்தடைந்தனர். ’பெடல் புஸ்ஸர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் இடம்பெற்றுள்ளனர். சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக இந்த விழிப்புணர்வு பேரணியை அவர்கள் மேற்கொண்டனர். … Read more