திருமணமான மகள்களுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

திருமணமான மகள்கள், விபத்துகளில் பெற்றோரை இழந்தால் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு பெற உரிமை உண்டு என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏப்ரல் 12, 2012 அன்று ஹுப்பள்ளி, யமனூர் அருகே விபத்தில் உயிரிழந்த ரேணுகா (வயது 57) என்பவரின் திருமணமான மகள்களுக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எச்.பி.சந்தேஷ் தலைமையிலான உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரித்தது. ரேணுகாவின் கணவர், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் … Read more

வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீட்டை கட்டாயமாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 1 முதல் புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுக்கு காப்பீட்டை கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. காப்பீடு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு போக்குவரத்துறை கூடுதல் தலைமை … Read more

தனியார் நிறுவனங்களுக்கும் இஎஸ்ஐ காப்பீட்டு சட்டம் உண்டு – சென்னை உயர் நீதிமன்றம்!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் காப்பீட்டு திட்டங்கள் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீடு சட்டம் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என்ற தமிழக அரசின் 2010 ஆம் ஆண்டு அறிவிப்பானை தனியார் கல்வி … Read more

மாணவர்கள் விபத்து காப்பீடு: கூடுதல் அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு  தொடர்பாக கூடுதல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது ,அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி ,”விடுமுறை நாளில், நீர் நிலைகளில் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் ஏற்கப்படும். “பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம்” ஏற்கப்படும் .”விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்” என்று பள்ளிக் … Read more