#U19WorldCupFinal: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் கடந்த 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலியா பழிதீர்த்துக் கொண்டது. 15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. இன்றைய தினம் இறுதிப்போட்டியானது பெனோனியில் நடைபெற்ற நிலையில் … Read more

ரோஹித்தின் கண்ணீருக்கு பழிக்கு பழி வாங்குமா இந்திய இளம் படை..!

rohit sharma

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின்  இறுதிப்போட்டியில் இந்தியாவும்,  ஆஸ்திரேலியாவும் பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின்  இறுதிப்போட்டியில் இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு முறை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளன. இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக  நடைபெற்று வருகிறது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய அணி  ஆஸ்திரேலியாவை வீழ்த்தி … Read more

6-வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா இந்தியா..? ஆஸ்திரேலியா  பேட்டிங் தேர்வு..!

U19WorldCup

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின்  இறுதிப்போட்டியில் இன்று இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா  பேட்டிங் தேர்வு செய்துள்ளது.   19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன் 2012, 2018 ஆகிய 2 முறை மோதியுள்ள நிலையில் இந்த 2 போட்டியிலும்  இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அணி வீரர்கள்: தர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன்(கேப்டன் … Read more

#U19WorldCup: 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான இதில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி நாளை களமிறங்குகிறது. 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் முறையே இந்திய அணி … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடும் மைதானத்தில் மின்சாரம் துண்டிப்பு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி ராய்ப்பூர் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் மின்கட்டண நிலுவையில் இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த மைதானம் பல சர்வதேச போட்டிகளை நடத்தியது. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா … Read more

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா.? இன்று ஆஸ்திரேலியாவுடன் 4வது போட்டி.!

INDvsAUS 4th

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதுவரை 3 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில், இன்று நான்காவது போட்டியானது நடைபெறவுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போது நான்காவது டி20 போட்டி ராய்பூரில் உள்ள … Read more

INDvAUS T20 : ஸ்மித், மேக்ஸ்வெல் உட்பட 6 வீரர்களுக்கு ஓய்வு.! அவர்களுக்கு பதில் இனி இவர்கள்…

Australia T20 squad

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த கையுடன் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் கடந்த சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய ஆகிய இரண்டு அணிகளிலும் மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், மேத்யூ வேட் … Read more

போட்டியின் கடைசி ஓவரில்.. தோனி கூறிய அறிவுரை இதுதான்.! ரிங்கு சிங் ஓபன் டாக்.!

Dhoni - RinguSingh

ஒருநாள் உலககோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியானது விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மேத்யூ வெயிட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இதில் ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தார். ஜோக்ஸ் இங்கிலீஷ் ஒரு படி மேலே சென்று, 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என பறக்க … Read more

மக்கள் என்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்கள்.! சஞ்சு சாம்சன் பதில்..

Sanju Samson

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டரான சஞ்சு சாம்சன், மக்கள் தன்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைப்பதாக தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகமான சஞ்சு சாம்சன், 13 ஆட்டங்களில் 55.71 சராசரி மற்றும் 104.00 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 390 ரன்கள் குவித்தார். இருந்த போதிலும் தேர்வுக்குழு அவரை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை. இதற்கு முன் நடந்த 2023 ஆசிய … Read more

எனது அணிக்காக போட்டியை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.! ரின்கு சிங்

Rinku Singh

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நேற்று (23.11.2023) முதல் டி20 போட்டியானது நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் மேத்யூ வெயிட் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், முதலில் ஸ்டீவன் ஸ்மித், மத்தேயு ஷார்ட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். மத்தேயு ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, … Read more