3 கோடி பயணிகளின் IRCTC தகவல்கள் கசிந்ததாக வெளியான தகவல்! இந்திய ரயில்வே மறுத்துள்ளது.!

3 கோடி பயணிகளின் தகவல் ஆன்லைனில் கசிந்ததாக வெளிவந்த தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்று, அதிலிருந்து 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர், ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறினார். ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய பிரபலங்கள், … Read more

3கோடி ரயில் பயணிகளின் தகவல் ஆன்லைனில் விற்பனை.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

3 கோடி ரயில் பயணிகளின் தகவல்களை, ஹேக்கர் ஆன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்றுள்ளது, 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய … Read more

இந்தியவா.? ஹிந்தியவா.? ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்.! மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்.!

ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் செய்தியை பகிர்ந்ததை விமர்சனம் செய்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சுவெங்கடேசன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இது ஹிந்தியவா? இந்தியாவா? ஹிந்தி திணிப்பை கைவிடுங்கள் என பதிவிட்டுள்ளார். அதாவது, இந்திய ரயில்வே துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ரயில்வே ஆட்சேர்பு தொடர்பாக யாரிடமும் ஏமாற வேண்டாம். அது உங்களை தகுதியற்றவர்களாக மாற்றிவிடும்’ என பொதுவான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

20 ரூபாய்க்காக இந்திய ரயில்வேக்கு எதிராக நடந்த 22 வருட சட்டப் போராட்டத்தில் வழக்கறிஞர் வெற்றி..

1999-ல் துங்கநாத் சதுர்வேதி தனது சொந்த ஊரான மதுராவில் இருந்து மொராதாபாத்திற்கு ரயிலில் செல்ல இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினார், ஒரு டிக்கெட்டின் விலை 70க்கு பதிலாக ரூ.90 வசூலிக்கப்பட்டு, அவருக்கு ரசீது வழங்கப்பட்டது. ஆனால் மாநில இரயில்வே அதிகாரிகள் அவருக்குப் பணத்தைத் திரும்பப்பெற மறுத்துவிட்டனர். இழப்பீடுக்காக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். அவருக்கு இழப்பீடு வழங்கப்படுவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஐந்து வெவ்வேறு நீதிபதிகள் முன் … Read more

“தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு,வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு” – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வெறும் ஆயிரம் ரூபாய்: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று … Read more

#Breaking:ரயில்வே துறையில் 5-ஜி இணையதள சேவை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ரயில்வே துறையில் 5-ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால்,அடுத்த 5 ஆண்டுகளில் சிக்னல் நவீனமயமாக்கல் மற்றும் ரயில்வேயில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை செயல்படுத்த 25,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு … Read more

கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்துக்களால் ஒரு பயணிகள் கூட இறக்கவில்லை – பியூஷ் கோயல்

ஏறக்குறைய 22 மாதங்களில் ரயில் விபத்துக்களால் ஒரு பயணிகள் கூட இறக்கவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் உள்ள ரயில் பாலங்களின் நிலை குறித்து பேசிய திரு கோயல், “கடந்த 6 ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்பு குறித்து அதிக அளவில் கவனம் செலுத்தியுள்ளோம். ரயில் விபத்து காரணமாக கடைசியாக பயணிகள் இறந்தது மார்ச் 22, 2019 அன்று நடந்தது. ஏறக்குறைய 22 மாதங்களில், ரயில் விபத்துக்களால் ஒரு … Read more

1,03,769 காலியிடங்கள்:- 20,734 பணியிடங்கள் அப்ரெண்டிஸ்க்கு ஒதுக்கீடு

பயிற்சி பெற்றுவர்களுக்கு (அப்ரெண்டிஸ்) 1,03,769 காலியிடங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான தகவல் படி: அப்ரெண்டிஸ் சட்டத்திருத்தின் படி, ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட 1,03,769 காலியிடங்களில் 20 %  காலியிடங்களான 20,734 காலியிடங்களை பயிற்சி பெறுவோருக்காக (அப்ரெண்டிஸ்) இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும்  2017 ம் ஆண்டு  மார்ச்சில் விலக்கப்பட்ட இவ்வதிகாரத்தை திரும்ப அளிக்க அப்ரெண்டிஸ் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் திறந்தவெளி … Read more

44 வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான டெண்டரை ரத்து செய்த இந்திய ரயில்வே .!

ரயில்களுக்கு சென்னை பெரம்பூரில் உள்ள ஐ சிஎப் ஆலை ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், 44 வந்தே பாரத் ரயில்களுக்கான 704 பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப், ஆலைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி பெட்டிக்காக சில மின் உதிரி பாகங்களை வாங்க கடந்த டிசம்பரில் உலகளாவிய டெண்டரை ஐசிஎப் அறிவித்தது. கடந்த மாதம் டெண்டரில் 6 நிறுவங்கள் கலந்து கொண்டனர். அதில், ஏலத்தில் பங்கேற்ற ஆறு நிறுவங்களில் ஐந்து நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான பாரத் … Read more

ஒருவர் எந்த மண்டலத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ அதனை பொறுத்தே பணி நியமனம்.! ரயில்வே நிர்வாகம் விளக்கம்.!

ஒருவர் எந்த மண்டல ரயில்வேக்கு விண்ணப்பிக்கிறாரோ, அதனை பொறுத்தே அவருக்கு பணி நியமன மண்டலம் ஒதுக்கப்படுகிறது – தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகம். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே தேர்வில் வெற்றியடைந்து, அதில் தேர்ச்சி பெற்ற 541 பேருக்கு திருச்சி பொன்மலை ரயில்வே நிலையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் 40 பேர் மட்டுமே தமிழர்கள். இதனால் ரயில்வே தேர்தலில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை … Read more