வெட்டுக்கிளி தாக்கியதால் பயிர்கள் பாதிப்பு… கண்டு கொள்ளாத அரசு.. கூடை நிறைய வெட்டுக்கிளியுடன் சென்று கோரிக்கை விடுத்த எம்எல்ஏ…

விவசாய பயிர்கள் வெட்டுக்கிளி தாக்கி பாதிப்பு. வினோத முறையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ.  ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட்  தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ  வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் ,  ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக … Read more

இந்தியாவிலேயே காய்கனி உற்பத்தியில் முதலிடம் மேற்குவங்கம்.. அறிவித்தது மத்திய அரசு..

கடந்த 2018-19ம் ஆண்டில் இந்தியாவிலேயே  காய்கனிகள் உற்பத்தியில்  மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு  தோட்டகலைத்துறை விளைச்சல் பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018-19ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 29.55 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு காய்கனிகளை உற்பத்தி செய்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல், கடந்த 2017-18ம் ஆண்டில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் இருந்தது இந்நிலையில் இந்த ஆண்டில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த … Read more

அமைச்சராகாவிட்டால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நானே ஏலத்தில் எடுத்திருப்பேன்..மத்திய அமைச்சர் அதிரடி கருத்து..

ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடன்  விவகாரம் குறித்த பத்திரிக்கையாளர்கள் கேள்வி. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அதிரடி  கருத்து. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட  மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களிடம், மாநாட்டின் இடையே,  அவரிடம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை … Read more

அறிவிப்பு வெளியானது… தேசிய வீரதீர விருது… சிறுவர்கள்,சிறுமியர்கள் தேர்வு..

இந்தியாவில்  குழந்தைகள் நல அமைப்பு  ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் தேசிய வீரதீர விருதுக்கான சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்து வருகிறது. இந்த முறை விருது பெறும் வீர தீரர் உங்களுக்காக. இந்நிலையில்,  கடந்த 2019 ம் ஆண்டிற்கான இவ்விருது 10 சிறுமிகள் மற்றும்  12 சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், இக்கட்டான சூழலில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியவதற்க்காக  இவ்விருது பெறுகின்றனர். இதன் மூலம் சிறுவர்களிடையே வீரதீர செயல், மற்றவர்களுக்கு உதவும் பண்பும் மணப்பாண்மையும்  வளர்கிறது.கேரளாவை சேர்ந்த இவ்விருது பெற்ற … Read more

இந்தியா-பிரேசில் இடையேயான ஒப்பந்தத்திற்க்கு அமைச்சரவை ஒப்புதல்… இரு நாடுகளின் உறவில் புதிய மைல்கல்..

பிரேசில் நாட்டுடனான ஒப்பந்தத்திற்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இரு நாடுகளின் உறவு மேலும் சிறக்கும் என எதிர்பார்ப்பு. தலைநகர் புது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக , இந்தியா மற்றும்  பிரேசில் நாட்டிற்க்கு இடையே கையெழுத்தாக உள்ள ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், இரு நாடுகளுக்கிடையேயான குற்றங்கள், தீவிரவாதத்துடனான தொடர்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல் போன்ற … Read more

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் மாவோயிஸ்ட் சரண்டர்… மறுவாழ்விக்கு ஏற்பாடு…

பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு சரண்டர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தார். ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில்  கமர்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஓர் இளம்பெண் தீவிரவாத இயக்கத்தில் இருந்து மீண்டுள்ளார். கர்மபள்ளி கிராமத்தை சேர்ந்த  ஆத்மி மத்கமி (22). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். இதையடுத்து, ஆத்மி மத்கமி கொலை, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இதனால் அவரது தலைக்கு 2 லட்ச ரூபாய் சன்மானமாக அரசால்  … Read more

புதிதாக 68 சிறப்பு ரெயில்கள்.. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு..

தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு. புதிதாக 68 சிறப்பு ரயில்கள் இயக்கம்.      சென்னை முதல்  கோவை மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரெயில்வே தற்போது அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை முதல் கோவை இடையே 2 குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரெயில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  முதல் மார்ச் 31 ஆம் … Read more

அன்று முதல் இன்று வரை… பட்ஜெட் குறித்த ஓர் அலசல்… பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..

இந்தியாவில் ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் குறித்த சிறப்பு தொகுப்பு. அன்று முதல் இன்று வரை அனைத்தும் கீழே. இந்தியாவில் முதன்முறையாக  பட்ஜெட்  1860-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  7-ம் தேதி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி தான் அறிமுகம் செய்தது. அப்போது இந்திய நிதி கவுன்சிலின் உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் என்பவரது  ஆலோசனையின் பேரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வரை இந்த நிகழ்வு ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். … Read more

இந்தியாவில் குடியுரிமை சட்டம் … தேவையே இல்லாதது.. அண்டை நாட்டு பிரதமர் அதிரடி பேச்சு…

இந்தியாவின் குடியுரிமை சட்டம் தேவையில்லாதது என அண்டை நாட்டு பிரதமர் கருத்து. எனினும் இது இந்தியாவின் உள் விவகாரம் எனவும் கருத்து. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட  குடியுரிமைச் சட்டமானது நம் அண்டை நாடுகளான  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் வெளியேறும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் முஸ்லிம்களைத் தவிர்த்து இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி மற்றும் கிறிஸ்தவர்கள் என 6 மதங்களைச் சார்ந்தவர்களுக்குக் … Read more

புதிய வைரஸ் தாக்குதலுக்கு செத்து மடியும் சீனர்கள்.. இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..

சீனாவில் பரவி வரும் புதிய உயிர்கொல்லி வைரஸ். இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடக்கம். பொதுவாகவே வைரஸ் நுண்ணுயிரிகள் தங்களின் உருவ அமைப்பை அடிக்கொருமுறை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இந்த வைரஸ் நுண்ணுயிரிகளுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2002-ஆம் ஆண்டு நம் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவிய, கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் வைரஸ் மூலம் உலகளவில் சுமார் 700 பேர் வரை உயிரிழந்தனர். இந்த வைரஸ் … Read more