#BREAKING: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30-ஆக அதிகரிப்பு!

சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு என தகவல். சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 12 பேருக்கு தொற்று உறுதியானது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கொரோனா … Read more

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா! – சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

டெல்லி போன்ற சூழல் தமிழகத்திலும் உருவாகலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் எச்சரிக்கை. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்த 10 பேரில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது … Read more

#BREAKING: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா!

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் மருத்துவத்துறை செயலாளர் … Read more

GATE-2022.! விண்ணப்பத்தை திருத்திக்கொள்ள ஓர் அறிய வாய்ப்பு.!

GATE நுழைவுத்தேர்வுக்காக பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதனை திருத்திக்கொள்ள இன்று ( நவம்பர் 1) முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஐடி பல்கலைக்கழக கல்லூரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வான GATE (Graduate Aptitude Test in Engineering) அடுத்த வருட பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. M.E , M.Tech போன்ற மேற்படிப்புகளை ஐஐடியில் சேர்ந்து படிப்பதற்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், … Read more

மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர்…!

மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர்.  கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில், பட்டியல் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு வருட சிறப்பு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறது. அவ்வாறு ஆன்லைன் வகுப்பு நடத்திய மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் சீமா அவர்கள் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களை வெட்கம்மற்றவர்கள் என்று தகாத வார்த்தையால் சாதிப் பிரிவை குறிப்பிட்டு திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய கீதத்துக்கு … Read more

ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜன.7 வெளியீடு.!

ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் வருகின்ற 7ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு … Read more

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!

பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கல்லூரி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடந்த நிலையில், வகுப்புகள் தொடங்கவில்லை. பொறியியல் வகுப்புகள் தொடங்காத நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிக்கை ஒன்றை … Read more

ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்.!

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய கவுரவ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மனுதாரர் கவுரவ் குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற மனுக்களைத் தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் … Read more

பிரதமர் மோடியின் முடிவு தவறானதா.? பாஜக எம்.பி டிவீட்.!

நீட், ஜே.இ.இ நுழைவு தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கும் என டெல்லி ஐஐடி இயக்குனர் கூறியதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியம் சுவாமி ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை தாமதப்படுத்துவதால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படும். எனவே அவற்றை குறிப்பிட்ட தேதியில் நடத்தவேண்டும் என டெல்லி, ஐஐடி இயக்குனர் தெரிவித்திருந்தார். இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவருக்கும் மாநிலங்களவை … Read more

மருத்துவ கழிவுகளை அகற்ற ஜெர்மன் – சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு!

மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக ஜெர்மன் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து புதிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளனர். வேதிப்பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகள், மருத்துவ கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றை கையாள்வதில் தற்போது பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மனிதனுக்கும் பெரும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த மருத்துவ கழிவுகளை தற்பொழுது ஜெர்மனியை சேர்ந்த ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அளிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர். இந்த மருத்துவ கழிவுகளை வைத்து உரம் தயாரித்து, கழிவுநீர் கழிவுகள் … Read more