#JustNow: ஈபிஎஸ்-யுடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு!

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் சந்திப்பு. சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் சந்தித்து பேசி வருகிறார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி நடவடிக்கைக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி என்று கூறப்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது – அமைச்சர் மெய்யநாதன்

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி என்று அமைச்சர் தகவல். கடந்த 2013-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டிய போது பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு விவசாயிகளின் போராட்டம் காரணமாக கிணறு முற்றிலுமாக மூடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மீண்டும் கிணறை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முனைப்பு காட்டியபோது தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. பெருங்குடியில் ஓஎன்ஜிசி … Read more

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி நடைபெறவில்லை – மத்திய அரசு

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்து எடுக்கும் பணி நடைபெறவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நாகப்பட்டினம் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகாவையும் இணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரையறுத்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இப்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முன்னதாக மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மக்களவையில் இன்று திமுக எம்பி … Read more

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது- முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றது.இதில் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பரசன்    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பேசினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.   அப்பொழுது அவர் பேசுகையில் ,தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது.காவிரி டெல்டா பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை  என்று பதில் அளித்தார். 

என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.  திமுக  15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதாவது,என்பிஆர்-க்கு (தேசிய மக்கள் தொகை பதிவேடு) எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் … Read more

#BREAKING : ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவின் எண்ணை வளங்களை கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக  ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்தல் மற்றும் வளங்களை கண்டறிதல் என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017 ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள  டெல்டா மாவட்டங்களில் எடுக்க திட்டமிடப்பட்டது … Read more

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம்… அறிவித்தார் அக்கட்சி தலைவர்..

திமுக சார்பில் தமிழகத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எதிர்கட்சி தலைவர் எடுக்கும் புதிய அஸ்த்திரம்.  ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பையும் திரும்ப பெற வேண்டும் என்றும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வு கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் … Read more

ஹைட்ரோகார்பன் திட்டம் -பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!

ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை என  மத்திய அரசு கூறியது. இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை எனவும் , மேலும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் … Read more

மீத்தேன் , ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது-அமைச்சர் ஜெயக்குமார்.!

ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது  கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறியது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது எனவும் ,மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் , ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது எனவும் அப்படி குழாய் பதிப்பதனால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் … Read more

ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.!

2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. நெடுவாசல் மற்றும் வடகாடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடகாடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது இன்று விசாரணை … Read more