1,191 ஏக்கர் நிலத்தை மீட்க உத்தரவு.! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.!

மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை விமான நிலைத்திற்கு அருகே உள்ள மதுரை ஆதீனமடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலமானது புதுச்சேரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை … Read more

பழங்குடியினருக்கான நிதி வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை.! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.!

எந்த துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ, அந்த துறை மேம்பாட்டுக்கு தான் குறிப்பிட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது. – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். அரசு ஒவ்வொரு துறைக்கும் அதன் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கும். அதனை அரசு அதிகாரிகள் அந்தந்த துறை மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த நிதிகள் முறையாக பயன்படுத்தவில்லை. பழங்குடியினர் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று … Read more

காவல்துறை மீது பொய் குற்றசாட்டு வைத்தால் கடும் நடவடிக்கை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காவல்துறை மீது பொய்யான குற்றசாட்டு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     காவல்துறை மீது பொய்யான குற்றசாட்டு வைத்தால், அந்த குற்றசாட்டு ஆதாரம் இல்லாமல் சுமத்தப்பட்டால் குற்றம் சுமத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   காவல்துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தன்மை அறிந்து, ஆராய்ந்து செயல்பட வேண்டும் எனவும் உஉயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, காவல்துறையினர் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வீராங்கனை பிரியா மரணம்.! மருத்துவர்களின் முன்ஜாமீன் ரத்து.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில், முன்ஜாமீன் மனு கோரியிருந்த இரு மருத்துவர்களுக்கும் முன்ஜாமீனை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.   வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில் முன் ஜாமீன் கோரியிருந்த, அரசு மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில்,  பால்ராம் சங்கர், … Read more

கலை பற்றி தெரியாததவர்களுக்கு கலைமாமணி விருது.! – உயர்நீதிமன்றம் விமர்சனம்.!

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இரண்டு படங்களில் நடித்தால் விருது கொடுத்துவிடலாம் என்று இயல் இசை நாடகத்துறை செயல்படுகிறதா.? என உயர்நீதிமன்ற மதுரை கிளை விமர்சனம் செய்துள்ளாது.  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் கீழ் நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை என பல்வேறு கலைகள் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு இயல் இசை … Read more

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலன்களை வழங்காத விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உயர்நீதிமன்ற குழுவானது தமிழகத்தில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணை படி, பணபலங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தற்போது வரையில் அரசாணைப்படி பணபலன்கள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, பல முறை பள்ளிக்கல்வித்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. … Read more

தூசிதட்டப்படும் எம்.எம்.ஏ வழக்குகள்.! உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை விவரங்களை உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கடுமையான குற்றங்கள் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்பாய் பொதுநல வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அமர்வு, இதுவரை 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் … Read more

கலப்பு திருமண சான்றிதழ் விவகாரம்.! பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கலப்பு திருமண சான்றிதழை சமர்பிக்கவில்லை என்பதற்காக பணி நியமன ஆணையை வழங்க தாமதிக்க கூடாது என ஓர் வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறைக்கு ஓர் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளங்கோ என்பவர் தனக்கு பணி நியாமன ஆணை இன்னும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் கலப்பு திருமணம் செய்து இருந்துள்ளார் . அதன் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என கூறி அவருக்கான பணி நியமனம் தாமதிக்கப்பட்டதாக தெரிகிறது. … Read more

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல” – கேரளா உயர்நீதிமன்றம்..

“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல”. தவறான உறவுமுறையில் ஈடுபட்டுள்ள கணவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர்க்க விரும்பினால், தற்போதைய உறவை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் கூறியது. விவாகரத்து கோரிய கணவன், 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தங்களின் திருமண உறவு சுமூகமாக இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு, அவரது மனைவி தனக்கு தவறான நடத்தையில் தொடர்பு இருப்பதாகக் கூறி … Read more

திருமணமான மகள்களுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

திருமணமான மகள்கள், விபத்துகளில் பெற்றோரை இழந்தால் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு பெற உரிமை உண்டு என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏப்ரல் 12, 2012 அன்று ஹுப்பள்ளி, யமனூர் அருகே விபத்தில் உயிரிழந்த ரேணுகா (வயது 57) என்பவரின் திருமணமான மகள்களுக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எச்.பி.சந்தேஷ் தலைமையிலான உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரித்தது. ரேணுகாவின் கணவர், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் … Read more