கூகுளின் புதிய விதி : அனைத்து கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கும் தடை…!

கூகுள் நிறுவனம் தற்போது உருவாகியுள்ள புதிய விதிகளின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துபவர்கள் இனி தங்கள் போன்களில் உள்ள ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக தங்களுக்கு வரக்கூடிய மற்றும் தாங்கள் அழைக்கக்கூடிய கால்களில் ரெக்கார்டு செய்ய முடியாதபடி வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பலர் தங்களது மொபைல்களில் கூகுள் ப்ளே மூலமாக கால் ரெக்கார்ட் அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து, அதன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்து வந்தனர். இதன் மூலம் பயனாளர்களின் பிரைவசி மற்றும் டேட்டா ஆகியவை கேள்விக் குறியாக … Read more

2021-ன் கடைசி நாளை தனது முக பக்கத்தில் கோலாகலமாக கொண்டாடும் கூகுள்.!

2021-ன் கடைசி நாளான இன்று புத்தாண்டு ஈவ் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனமானது தனது டூடுலை வடிவமைத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது சர்ச் என்ஜின் முதல் பக்கத்தில் கூகுள் என எழுதி இருக்கும் வடிவத்தை ஒவ்வொரு முக்கிய தினத்திற்கும் ஏற்றவாறு வடிவமைத்து இருக்கும். உதாரணமாக சுதந்திர தினம், குடியரசு தினம், மகளிர் தினம் என பெரும்பாலான தினங்களுக்கு கூகுள் தனது டூடுலை மாற்றிவிடும்.   அதே போல, 2021 வருட இறுதியான இன்று கூகுள் தனது … Read more

இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் மேப் பயன்படுத்தலாம்.! உங்களுக்கு தெரியாத வழி இதோ…

கூகுள் மேப்-ஐ இன்டர்நெட் வசதி இல்லாமலும் நம்மால் எப்படி அதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் என சிறு குறிப்பாக பார்க்கலாம். கூகுள் மேப் என்பது தற்போதைய காலகட்டத்தில் வழி கேட்கும் பெட்டிக்கடை போல நம்மில் கலந்துவிட்டது. முன்பெல்லாம் வழி தெரியா இடங்களுக்கு சென்றால், அல்லது செல்வதற்கு ஆயத்தமானல் அங்குள்ள பெட்டிக்கடை, அப்பகுதி மக்கள் என வழி கேட்டு செல்வோம். நாம் செல்லும் நேரத்தில் அப்படி யாரும் இல்லை என்றால் சிக்கல் தான். ஆட்கள் அல்லது வாகனம் ஏதேனும் வருகிறதா … Read more

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் – கூகுள் எச்சரிக்கை!

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் … Read more

கூடுதல் பாதுகாப்பு!நவம்பர் 9 முதல் கூகுள் மாற்றும் முக்கிய அம்சம்!விவரம் இங்கே!

நவம்பர் 9 முதல்,அனைத்து கூகுள் கணக்குகளிலும் இரண்டு-படி சரிபார்ப்பு  செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும்,பயனர்கள் அவர்களின் கணக்குகளை அணுக இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனமான கூகுள்,தனது இயங்குதளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது, இது வரும் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.நவம்பர் 9 முதல்,கூகுள் கணக்குகள் ஒரு பெரிய பாதுகாப்பு புதுப்பிப்பைப் பெறும்.இதன்மூலம் ,உங்கள் கணக்கிற்கான ஒரே கிளிக்கில்(one-click login )உள்நுழையும் அம்சத்திற்கு கூகுள் … Read more

2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மழையைக் கணிக்க உதவும் கூகுள் டீப்-மைண்ட் அசத்தலான கண்டுபிடிப்பு..!

2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மழையை கண்காணித்து கூறும் AI- அடிப்படையிலான ‘நவ் காஸ்டிங்’ அமைப்பை கூகுள் உருவாக்கியுள்ளது. பொதுவாக கோடைக்காலத்தை விட மழைக்காலங்களில்,காய்ச்சல், ஜலதோஷம்,சளி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உண்டு.அவ்வாறு இருக்க சில நேரங்களில் வானிலை முன்னறிவிப்புகள் கூட மழைக்கான வாய்ப்புகளைக் கணிப்பதில் சிறிது பின்தங்கி விடுகிறது.இதனால்,மழைக்கலங்களில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் கனமழைகளில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில்,கூகுளுக்குச் சொந்தமான லண்டன் ஆய்வகமான டீப் மைண்டின் விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு … Read more

இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் கிடையாது?

கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு  முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் … Read more

இன்று இல்லை…தீபாவளிக்கு முன்னரே ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் விற்பனை – ஜியோ நிறுவனம் அறிவிப்பு..!

ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணியில் உருவான ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியான இன்று விற்பனைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அதன் தயாரிப்பு முழுமை அடையவில்லை என்பதனால்,விற்பனை … Read more

இந்தியாவில் கடந்த மாதம் கூகுள் 95,680 பதிவுகளை நீக்கியது..!

இந்தியாவில் கூகிள் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 36,934 புகார்களைப் பெற்று 95,680 பதிவுகளை கூகிள் அகற்றியது. இந்தியாவில் கூகிள் நிறுவனம் பயனர்களிடமிருந்து கடந்த ஜூலை மாதம் 36,934 புகார்களைப் பெற்று 95,680 பதிவுகளை கூகிள் அகற்றியது. இது ஏப்ரல் மாதத்தில் 59,350 பதிவுகளையும், மே மாதத்தில் 71,132 பதிவுகளையும், ஜூன் மாதத்தில் 83,613 பதிவுகளையும் அகற்றியது. சில கோரிக்கைகள் அவதூறு போன்ற காரணங்களுக்காக உள்ளூர் சட்டங்களை மீறுவதாகக் கூறுகின்றன. எங்கள் தளங்களில் உள்ள பதிவுகள் தொடர்பான … Read more