ரஷ்யாவே சைபர் தாக்குதல் பாதிப்புகளுக்கு காரணம்!

பிரிட்டன் சைபர் தாக்குதலால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரஷ்யாவே காரணம் என  குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உக்ரைனில் உள்ள நிதி, மின்சாரம், மற்றும் அரசுத் துறைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதலால் ஐரோப்பிய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. இதனால், வர்த்தக நிறுவனங்களுக்கு சுமார் 120 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என பிரிட்டன் சாடியுள்ள நிலையில், அதை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

நாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு!

பிரிட்டன் நீதிமன்றம், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் உளவு நிறுவனங்களின் கணிணியை ஹேக் செய்தாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டீஸ் இளைஞரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த  மறுத்து விட்டது. லவுரி லோவ் (Lauri Love) என்ற 32 வயது இளைஞர் கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எப்பிஐ (FBI), நாசா மற்றும் அமெரிக்க ராணுவ கம்ப்யூட்டர்களை ஹேக் செய்ததாக கைது செய்யப்பட்டார். பிரிட்டனில் வசித்து வரும் இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்ட நிலையில், அதை எதிர்த்து … Read more

பிரிட்டன் பாதிப்புகள் குறித்து வெளியான திடுக் தகவல் !வெளியே கசிந்த ரகசிய அறிக்கை….

பிரிட்டன் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என  வெளியே கசிந்த ரகசிய அறிக்கையால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, பிரிட்டன் அரசிற்காக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை,புஸ்பீட்  ( BuzzFeed) என்ற செய்தி இணையதளத்தின் மூலம் வெளியாகியுள்ளது. அதில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரிட்டன், எத்தகைய வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டு வெளியேறினாலும் பாதிப்பை தவிர்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் செய்து கொள்ளுமானால், 15 … Read more