வேலை வாங்கித் தருவதாக மோசடி…போலீஸில் புகார் அளித்த நடிகை வித்யா பாலன்.!

Vidya Balan

நடிகை வித்யா பாலன் பெயரில் போலி ஜிமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி சினிமா துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது பெயரில் போலி கணக்குகள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது, அந்த நபர் நாளடைவில் வித்யா பாலனின் நண்பர்களிடமும் தனது கைவசரிசையை காமிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் வித்யா பாலனின் காதுக்கு செல்ல…உடனே, தனது மேலாளரிடம் கூறி புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், … Read more

கூகிள் பே மூலம் ₹49,500 மோசடி!!

லேப் எம்ப்லாய் ஒருவரிடம் கூகிள் பே மூலம் ₹49,500 மோசடி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் லேப் எம்ப்லாய் ஆக பணிபுரியும் பெண்ணிடம்(27) , 25 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்று கூறி ₹49,500 மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அவர் கொடுத்த புகாரில், “வீடியோ கால் மூலம் அவருக்கு கூகுள் பே செயலியைத் திறந்து “பே பில்ஸ்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்பட்டதையடுத்து அவரது பேங்க் அக்கோவுன்டில் இருந்து ₹49,500 திருடப்பட்டதாக” கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. 3 பேர் மீது குண்டாஸ் – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

பிற மாநிலம் உள்பட பல்வேறு இடங்களில் போலி ஷிப்பிங் நிறுவன மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் குற்றசாட்டு. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்த 3 பேர் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை … Read more

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் நூதன மோசடி…! ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு…!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடி ஈடுபட்டதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக விசாரிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு.  இன்று மோசடியில் பலர் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் பல்வேறு நூதனமான வழிகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் பெயரில் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வாட்சப்பில் ஈரோடு ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து, அதிகாரிகளின் வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். … Read more

பேமெண்ட் சேவை நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.38 கோடி திருட்டு!

பெங்களுருவில் பேமெண்ட் கேட்வே நிறுவனமான ரேஸர்பேயில் இருந்து ரூ.7.38 கோடி பணத்தை திருடிய ஹேக்கர்கள். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பேமெண்ட் சேவை நிறுவனமான ரேஸர்பே-வில் (Razorpay) ஹேக்கர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி சுமார் 7.3 கோடி ரூபாயை திருடியுள்ளனர். ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் சுமார் 831 தோல்வியுற்ற பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்காக Razorpay மென்பொருளின் அங்கீகார செயல்முறையையே (authorisation process) திருடி சுமார் 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று பேமெண்ட் கேட்வே நிறுவனம் அளித்த … Read more

‘மோசடி அழைப்புகள்’ – இந்த அழைப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் – காவல்துறை

இணையங்களில் வரும் கடன் செயலிகள் மூலம் யாரும் கடன் வாங்க வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.  இன்று பலர் மொபைலில் குறுந்செய்தி அனுப்புவதன் மூலமாகவும், அழைப்புகள் மூலமாகவும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இது போன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், pan card, kyc update கோரும் sms-க்கள், otp கேட்கும் போன் அழைப்புகளை … Read more

படிக்காமலேயே பட்டம் -117 பேர் தேர்வு முடிவுகள் ரத்து!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும்,தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தலா ரூ.3 லட்சம் … Read more

#BREAKING: நீட் மதிப்பெண் முறைகேடு..மாணவியின் தந்தை கைது..!

போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கு தொடர்பாக  தலைமறைவாக இருந்த பல்மருத்துவர் பாலச்சந்திரன் கைது.  போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கு தொடர்பாக பல்மருத்துவர் பாலச்சந்திரனை பெரியமேடு காவல்துறையினர் கைது செய்தனர். ராமச்சந்திரன் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த நிலையில், தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று அங்கு பாலச்சந்தரை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். பின்னர், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. போலி சான்றிதழ் எப்படி கிடைத்தது..? என்ற … Read more

டிஆர்பி மோசடி வழக்கு: ரிபப்ளிக் டிவி சி.இ.ஓ-விற்கு 2 நாள் போலீஸ் காவல்..!

டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை அணுகிய பின் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சந்தனி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விகாஸ் காஞ்சந்தனியை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உங்களுக்கு லாட்டரியில் 25 லட்சம் விழுந்துருக்கு வாட்சப் கால் மூலம் ஏமாற்றிய பீகார் இளைஞர் 3 பேர் கைது.!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 3 பேர் பீகாரிலிருந்து ‘கவுன் பனேகா குரோபதி’ என்ற லாட்டரி மூலம் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அதாவது பீகாரை சேர்ந்த இம்தியாஸ் அலி, இர்பான் அலி, சந்தோஷ்குமார் ஆகியோர் கவுன் பனேகா குரோபதி என்ற லாட்டரி மூலம் அங்குள்ள மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் பாகிஸ்தான் எண்ணிலிருந்து தனக்கு வாட்ஸ்அப் அழைப்பு வந்ததாகவும், கவுன் பனேகா குரோர்பதி லாட்டரியில் … Read more