வெள்ள பாதிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…!

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மணலி புதுநகர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தற்போதும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி புதுநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு … Read more

ஆந்திரா : கனமழை மற்றும் வெள்ளத்தால் 14 பேர் உயிரிழப்பு ..!

ஆந்திராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 3.4 … Read more

மழை வெள்ளப்பாதிப்பு : களத்தில் இறங்கிய தலைமை செயலாளர் இறையன்பு..!

தலைமை செயலாளர் இறையன்பு  அவர்கள், சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை : தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், முதல்வர் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில், பெரும்பாலான இடங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி  … Read more

“பேரன்பின் உருவமாய் நம் தலைவர் இருக்கும்போது,இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது” – அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை:பேரன்பின் உருவமாய் நம் தலைவர் இருக்கும்போது, இயற்கையின் இடர்கள் நம்மை வீழ்த்திடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார். அதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம்,வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பார்வையிட்ட முதல்வர்,இன்று துறைமுகம்,ராயபுரம்,ஆர்கே நகர் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.குறிப்பாக,துறைமுகம் பகுதியில் கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பார்வையிட்ட முதல்வர் … Read more

#Breaking:சென்னை:மழை,வெள்ள பாதிப்பை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

சென்னையில் மழை,வெள்ள மீட்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள வீடுகள் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் தேங்கி காட்சியளிக்கிறது.கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் ஈவிஆர் சாலை, சுங்குரெட்டி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. மேட்லி சுரங்க பாதை, கணேஷபுரம் சுரங்க பாதை உள்ளிட்ட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில்,சென்னை கொளத்தூரில் மழை பாதிப்புகளை … Read more

கனமழை எதிரொலி : 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கனமழை காரணமாக 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்ட நெருங்கி விட்டது. ஏரியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் எந்நேரத்திலும் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை … Read more

#Breaking:வெள்ள பாதிப்பு – முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

வடசென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.இதனையடுத்து,சென்னையில் கோயம்பேடு, எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.இதனால்,சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 … Read more

Breaking:டெல்லி ஏர்போட்டில் விமானங்களை சூழ்ந்த மழைநீர்…!

டெல்லியில் பெய்து வரும் கனமழையால் ஏர்போட்டில் விமானங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. டெல்லியில் அதிகாலை முதல் பெய்து வரும் கன மழையால்,இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும்,விமான நிலையம் முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Delhi: Waterlogging at Indira Gandhi International Airport (Terminal 3) after national capital received heavy rain As per India Meteorological Department (IMD), Delhi will … Read more

இடா புயல்: மழை வெள்ளத்தால் 82 பேர் பலி..!

இடா புயல் காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில்வே நிலையங்கள் ஆகியவை வெள்ளக்காடாக … Read more

தெலுங்கானா: வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் பாதுகாத்த உரிமையாளர்..!#video

தெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் உரிமையாளர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து சென்றுள்ளது. இதனால் கார் வைத்திருக்கும் ஒருவர், தனது காரை வெள்ளம் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் நான்கு முனைகளிலும் கயிற்றால் கட்டி அதனை அவரது வீட்டின் மேல்கூரையில் உள்ள … Read more