பணமோசடியில் ஈடுபட்டதாக Paytm பேமெண்ட் வங்கிக்கு 5.49 கோடி அபராதம் விதிப்பு

Paytm: பணமோசடி செய்ததற்காக Paytm பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்திய நிதி அமைச்சகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. அமைச்சகத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கையை Paytm பேமெண்ட் வங்கி மீது எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சட்ட அமலாக்க முகமைகளின் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் Paytm பேமெண்ட் வங்கியின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யப்பட்டது, அதில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தை ஏற்பாடு செய்தல் … Read more

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்

Air india: அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து வயது முதிர்ந்த தம்பதி மும்பை வந்தனர். Read More – உச்சம் தொட்ட இந்தியாவின் GDP வளர்ச்சி! மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதம் இதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்த போது வீல் சேர் வசதி … Read more

போக்குவரத்து போலீசாரிடம் ரூ. 49,000 அபராதம் செலுத்திவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வாகன உரிமையாளர்

பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ரூ. 49,100 அபராதம் செலுத்திய நிலையில் அது தொடர்பான நீண்ட ரசீதுகளை போலீசாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. வடக்கு பெங்களூரு போக்குவரத்து துணை கமிஷனர் இது தொடர்பான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்காக, KA50-S-3579 வாகனத்தின் உரிமையாளர் முனிராஜிடம் இருந்து 49,100/- ரூபாய் அபராதம் முழுவதையும் வசூலித்தோம் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுடன், வாகனத்தின் உரிமையாளரான முனிராஜ், இரண்டு போக்குவரத்து காவலர்களுடன் … Read more

IPL2022:ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம். ஐபிஎல் 2022-இன் 15-வது சீசனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை பிரபோர்ன் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பிற்பகல் நடைபெற்ற இப்போட்டியில், மும்பையை அணியை வீழ்த்தி டெல்லி அதிரடியான முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. … Read more

ஆஸ்திரியாவில் தவறான காலை அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு அபராதம் ..!

தவறான காலை அகற்றிய அறுவை சிகிச்சை நிபுணருக்கு சுமார் ரூ. 2.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வயதான நோயாளியின் தவறான காலை அகற்றிய அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆஸ்திரிய நீதிமன்றம் அபராதம் 2,700 யூரோக்கள் (சுமார் ₹2.29 லட்சம்) விதித்தது. விதித்துள்ளது என்று வடக்கு நகரமான லின்ஸில் உள்ள நகர நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார். ஃப்ரீஸ்டாட் நகரில் மே மாதம் 43 வயதான அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு 82 வயதான நோயாளியின் இடது … Read more

நேற்று வெற்றி பெற்ற போதிலும் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!

சஞ்சு சாம்சனுக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் விதிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இருந்தபோதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.கேவின் எம்.எஸ் … Read more

இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 1,200 ரூபாய் அபராதம்!

இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு 1200 ரூபாய் அபராதமாக வசூலிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம். மும்பை மாநகராட்சியில் ஏற்கனவே பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இந்த அபராத தொகையை 1200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து கமிஷனர் இக்பால் அண்மையில் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது … Read more

படிக்காத வக்கீல் பதவிவகிப்பதாக வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம்!

படிக்காத வக்கீல் பதவிவகிப்பதாக வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பி சதீஷ்குமார் என்னும் வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக இருக்கக்கூடிய நீதிபதி பூர்ணிமா அவர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் அவர், பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் B.Com பட்டப்படிப்பை முடித்து அதன் பின் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து உள்ளதாகவும், இதை … Read more

நீட் விதிகளை புறக்கணித்த புதுச்சேரியின் 7 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்!

நீட் விதிகளை புறக்கணித்த புதுச்சேரியின் 7 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் விதிமுறைகளை புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகள் புறக்கணித்து மாணவர்களை அனுமதித்துள்ளது. இந்நிலையில் நீட் விதிகளை புறக்கணித்து மருத்துவப் படிப்பில் மாணவர்களை அனுமதித்த புதுச்சேரியை சேர்ந்த 7 மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம்.!

ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரிடம் தனியார் பேருந்தில் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்துள்ளார். நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இசக்கிமுத்துவுக்கு ரூ.20,000 வழங்க நீதிபதி ஆணையிட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 4 ம் கட்ட ஊரடங்கு வரும் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில், மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி … Read more