விவசாயிகளுக்கு நற்செய்தி! உரங்களுக்கான மானியம் அதிகரிப்பு – மத்திய அமைச்சரவை முடிவு!

Anurag Thakur

பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், DAP உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். DAP உரம் … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு..! பாசனத்திற்கு நீர்திறப்பு இல்லை..!

Cauveri River

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10  ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ்  குறைந்துள்ள  நிலையில், பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் இன்று சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,528 கனஅடியிலிருந்து 9,347 … Read more

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் பாசனத்திற்கான நீர்திறப்பு நிறுத்தம்..!

Kaveri River Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் அக்டோபர்-10  ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசன நீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடியாக குறைந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடிக்கு குறைந்துள்ள  நிலையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

ஏக்கருக்கு ரூ.5,400 இழப்பீடு போதுமானதல்ல! 30,000 ரூபாய் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 ஹெக்டேருக்கு ரூ.13,500 வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல. ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9192, உரம் மற்றும் … Read more

#BREAKING: விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த அக்.1 முதல் டிசம்பர் 4 வரையான வடகிழக்கு பருவமழை காலத்தில் … Read more

நற்செய்தி… விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் – அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு. பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினனாரின் கோரிக்கையை ஏற்று, கரும்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மேலும் … Read more

முதல்வருக்கு விவசாயிகள் நன்றி! ஜன.3 முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி. பொங்கல் பரிசு தொகுப்புகள் டோக்கன் வழங்கும் பணி ஜனவரி 3-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 3-ஆம் தேதி முதல் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. … Read more

உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் – அன்புமணி

உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  இன்று தேசிய உழவர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்,’உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள். தேசிய உழவர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; உழவர்களின் கண்ணீரை துடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். உழவர்கள் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும். அதற்காக பாமக போராடும்! என … Read more

உழவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்! – பாமக நிறுவனர் வேண்டுகோள்!

தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும் என ராமதாஸ் எச்சரிக்கை. பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கவிருக்கும் பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. கரும்பு உழவர்கள் நலனை கடுமையாக பாதிக்கும். தமிழ்நாட்டில் கடந்த சில … Read more

#BREAKING: பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு – அமைச்சர் அறிவிப்பு

இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்புகள் முழுமையாக வழங்கப்பட்டு விடும் என்றும் ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு … Read more