மக்களவை தேர்தல்… விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்..!

rahul gandhi

congress : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, கடன் தள்ளுபடி, MSP சட்டம், பயிர்க் காப்பீடு என விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அள்ளி வீசியுள்ளார். இதற்கு முன்பு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே வாக்குறுதிகளை அளித்த நிலையில், இன்று விவசாயிகளுக்கான பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. Read More – இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு! மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ நியாய … Read more

விவசாயிகளுக்கு ரூ. 201 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை … Read more

விவசாய தலைவர்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து!

NSA

விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது ஹரியானா அரசு. குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்பினர் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 12ம் தேதி சலோ டெல்லி என்ற பேரணி போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு என்ற பகுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். … Read more

தீவிரமடையும் போராட்டம்… விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்!

National Security Act

விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல், விவசாய கடன் தள்ளுபடி, மின்சாரம் திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் டெல்லி சலோ பேரணியை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி குவிந்து வருகின்றனர். இருப்பினும், … Read more

விவசாயிகளே! பயிர் காப்பீடு, நெல் கொள்முதல், கரும்பு சாகுபடி… பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

agricultural budget 2024

தமிழ்நாடு அரசின் 2024-2025ஆம் ஆண்டிற்கான வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள், விவசாயிகளுக்கு மானியம், நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-2024 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடியும், சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ.12.40 கோடியும் ஒதுக்கீடு … Read more

2024-25 தமிழக வேளாண் பட்ஜெட்… அரசின் முக்கிய அறிவிப்புகள்.!

TNAgriBudget2024

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் படஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை கீழே காணலாம். தமிழக வேளாண் பட்ஜெட் பயிர் காப்பீடு குறித்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு … Read more

விரைவில் 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம்! பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு!

farmers

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேரைவையில் அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2022-23ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.380.40 கோடி … Read more

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது… அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

political leaders

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க செய்யாறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக சுமார் 3,000 ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2-ம் தேதி விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட … Read more

முதல்ல சாப்பாடு போடுங்க…ரசிகையின் குரலை கேட்டு நடிகர் விஷால் செய்த அந்த செயல்.!

Vishal

புரட்சி தளபதி விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். இயக்குனர் ஹரியுடன் இது 3வது கூட்டணி ஆகும். தற்காலியமாக ‘விஷால் 34’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர். மேலும் இந்த படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக … Read more

விவசாயிகளுக்கான நிதியுதவியை இன்று விடுவிக்கிறார் பிரதமர்!

farmers Financial

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-ஆவது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை’ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கடனைக் குறைக்கவும் மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் … Read more